செவ்வாய், 28 ஜூலை, 2015

வெள்ளையுடை




மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு வெள்ளை நிற உடைகளும், மருத்துவர்களுக்கு வெள்ளை நிற அங்கிகளும் சீருடையாக உலகம் முழுவதும் இருக்கும் நடை முறை...

ஏன் இந்த வெள்ளை ஆடைகள்???? 

வெள்ளை ஆடைகள் மனதை அமைதி படுத்துவது .. சலனங்களை தவிர்க்க வல்லது.. செவிலியர்கள் இப்படியான வெள்ளை ஆடைகள் அணிந்து நோயாளிகளுக்கு சேவை செய்யும் பொது நோயாளிக்கோ, செவிலியருக்கு எவ்வித மன துவேஷமோ, வெறுப்போ மன கிளர்ச்சியோ, சலனமோ ஏற்படுவது தடுக்கப்படும்..
ஆகவே தான் அவர்களுக்கு வெள்ளை ஆடைகள் அணிவிக்கப்படுகிறது...
இது அறிவியல் பூர்வமாக உணரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் ஒரு விஷயம்...

இதனாலேயே இந்து மதத்தில் கைம்பெண்கள் வெள்ளை ஆடை அணியும் பழக்கம் இருந்தது.. சில பல இடங்களில் இன்றும் இருக்கிறது.. செஞ்சிலுவை பணியாளர்கள், பாதிரிமார்கள் போன்றோருக்கும் வெள்ளை ஆடைகள் சீருடைகளாக இருக்கிறது

ஆனால் தேவதைகள் வெள்ளை உடைகள் அணிவது மானுட கற்பனை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக