திங்கள், 27 ஜூலை, 2015

விளம்பர மாடல்கள்




முன்பெல்லாம் கார்பொரேட் கம்பெனிகள் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்ய பிரத்யோகமான நங்கைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கும்... அவர்கள் மெல்லிய தேகத்துடனும், சிவந்த நிறத்துடனும் கவர்ச்சியான அதரங்களுடனும் இருப்பார்கள்.. அவர்களின் கவர்ச்சியை மூலதனமாக்கி அதன் மூலம் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் யுக்திதான் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டது...

ஆனால் சமீப காலமாய் இந்த கார்பொரேட் கம்பெனிகளும் விளம்பர நிறுவனங்களும் முப்பதுகளில் இருக்கும் சற்றே பூசின உடல்வாகு கொண்ட பேரிளம் குடும்ப பெண்களை விளம்பரத்துறையில் இறக்கி இருக்கின்றன... சமகால நிறைய விளம்பரங்களில் சராசரி நடுத்தர வர்க்க குடும்பத்தலைவியின் தோற்றத்தில் இருக்கும் பெண்களை அதிகமாய் காண முடிகிறது....

இது ஆரோக்கியமான மாற்றம் என கொள்வதா...??? அல்லது சமகால இளைஞர்கள் மனோநிலைக்கு தகுந்தார்ப்போல் விளம்பர நிறுவனகள் அடுத்த கட்டத்தை நோக்கி தங்களை நகர்த்துகிறதா...??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக