ஒரு இனிய நாளின் அற்புத பொழுதில் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களுடன் தங்கி , உரையாடும் வரம் எனக்கு வாய்த்தது...
சமகால வாழ்க்கை முறை, சங்க கால தமிழ், சரித்திர கால சமர்கள் , சமய பாத்திரங்கள் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து மகிழும் பேரு பெற்ற பொன்னான நாட்கள் அவைகள்...
அப்படி பேசிக்கொண்டிருந்த வேளையில் எங்களூர் சாலைக்காக தங்களது ஆண்மையை நிரந்தரமாய் அடகுவைத்த இருபது பேரை பற்றியும், ஊர் நலனுக்காக உடல் நலனை தியாகம் செய்த அவர்களின் பரந்த மனசையும் பற்றி பகிர்ந்துகொள்ளும் பாக்கியமும் கிடைத்தது...
இதுபற்றி நான் விரிவாக பதிவு செய்த வலைத்தள முகவரியையும் அவரின் மேலான கவனத்தில் வைத்தேன்... உள்வாங்கிய அந்த விருட்சம் அதை கடந்த மாத "கல்கி"யில் கனியாய் பிரசவித்திருந்தது .
ஆம்.. அந்த தகவலை, கல்கி பத்திரிகையில் அவரின் கருத்துக்களுகாகவே காத்திருக்கும் கடைசி பக்கத்தில் அவரது பாணியில் சமகால சுயநலத்துடன் ஒப்பீடு செய்து .. "தேக ஆரோக்கியம் V s தேச ஆரோக்கியம்" எனும் தலைப்பில் பதிவு செய்திருக்கிறார்கள்...
மறக்காமல் என்னுடைய பெயரையும் , வலைத்தள முகவரியையும் குறிப்பிட்டு பதிவு செய்திருக்கிறார்கள்...

அவரது வார்த்தைகளுக்காக தவம் இருக்கும் தமிழார்வலர்கள்..., அவரது பாதம் படாதா என ஏங்கும் மேடைகள்... அவரது குரலை உள்வாங்கி உலகின் காதுகளுக்கு சத்தமாய் சேர்க்க மாட்டோமா என ஏங்கும் ஒலி வாங்கிகள்... உலகத்து தமிழர்களால் எல்லாம் உடனடியாய் கண்டுகொள்ளப்படும் அறிமுகம் நிறைந்த பிரபல மனிதர்...அவரின் பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் சமூக நலன் கருதி அந்த இருபது பேரின் தியாக உள்ளத்திற்கு மதிப்பளித்து, பதிவு செய்யப்படாமல் போன அதனை உலகின் பார்வையில் சேர்ப்பித்திருக்கிறார்கள்....
அந்த இருபது பேரின் சார்பாகவும், எங்களூரின் எல்லா தரப்பு மக்களின் சார்பாகவும், அந்த சாலையின் சார்பாகவும் சொல்வேந்தர் பெருந்தகை சுகி சிவம் அவர்களுக்கு கோடானுகோடி நெஞ்சம் நெகிழும் நன்றிகள்....!!!!

http://www.senthilknadesan.com/katturaikal/enkalurcalaiyincarittiram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக