ராமனின் மனைவியை கேள்விப்பட்டிருக்கிறோம்... தர்மனின் மனைவி பற்றி அறிந்திருக்கிறோம்... ராவணன் மனைவி பற்றியோ, துரியோதனன் மனைவி பற்றியோ என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா...??
நல்வாழ்க்கை வாழ்ந்தவர்களின் மனைவியும் நல்வாழ்க்கை தான் வாழ்ந்திருப்பார்.. ஆனால் கெட்டவர்களாக சித்தரிக்கப்படும் அவர்களின் மனைவியர்??? அவர்களும் கெட்டவர்களா என்ன...???
இல்லை... மாறாக.. ராமன், தர்மன் மனைவியரை விட உயர்ந்தவர்கள் , போற்றத்தக்கவர்கள் ராவணன் மனைவியும், துரியோதனின் மனையும்தான்...
தம்முடைய கணவன் தர்மத்திற்கு புறம்பாக, நீதிக்கு புறம்பாக நடக்கிறான் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்... ஆனாலும் அவர்கள் தங்கள் கணவனை விட்டு விலகவில்லை.. ஏன் தெரியுமா?? நான் இவனின் மனைவி.. இவனுக்கான பணிவிடைகள் செய்வது ஒன்றுதான் எனது தர்மம்... இவன் செய்யும் தீமைகளுக்கான பலனை இறைவன் கொடுக்கட்டும்.. அதை பற்றி யோசிப்பது கூட எனது வேலை இல்லை... என் கடமையை நான் செய்வேன் என்று கடைசி வரை அவர்களுடனே இருந்தவர்கள்..
ஆனால் துரதிஷ்டவசமாக, நல்லவர்களுடன் இருக்க மனைவிகளுக்கு பிடிப்பதில்லை...
(சொல்லி திருத்தி இருக்கலாமே.. என்ற சந்தேகம் வரலாம்... எடுபடாத இடங்களில் ஆலோசனை சொல்வதோ, அறிவுரை சொல்வதோ எந்த பயனையும் விளைவிக்காது )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக