சாலை, ரயில்,விமான, கப்பல்(படகு) விபத்துக்கள் எதுவும் நடந்தால் , அந்த விபத்தில் இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அரசுகள் நிவாரணத்தொகை அறிவிப்பது உண்டு...
இந்த நிவாரணத்தொகை இறந்தவர்களுக்கு அதிகமாகவும், காயமடைந்தவர்களுக்கு குறைவாகவும் இருக்கும்... இறந்தவர் அவருடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.... அவரது வீட்டில் இருப்பவர்கள் நிச்சயம் வேறு வேலை ஏதாவது செய்து பிழைத்துக்கொள்ள முடியும்.... ஆனால் கைகால்களை, கண்களை இழந்தவர்கள் கதி....???
அவர்களின் மிச்சமிருக்கும் வாழ்க்கையை யாரோ ஒருவரை எதிர்பார்த்தே கழிக்க வேண்டும்... நன்றாக இருக்கும் உறவுகளே புறக்கணிக்கும் இந்த காலத்தில் இப்படி ஊனமுற்றவர்கள் பாடு??? உடலாலும் மனதாலும் அவர்களது மிச்ச வாழ்க்கை பூலோக நரகமாகவே கழியும்...
இப்படியானவர்களுக்குத்தான் நியாயமாக அதிகப்படியான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்... அந்த இழப்பீட்டுத்தொகை ஏதாவது ஒரு வங்கியில் டெப்பாசிட் செய்யப்பட்டு, அதில் வரும் வட்டித்தொகை அவர்களுக்கு வருவது போல செய்தால் அந்த இழப்பீட்டுப்பணம் நிச்சயம் அவர்களது வாழ்வாதாரமாய் அமையும்....
உடல் உறுப்புக்களை இழந்தவர்களுக்கு அதிகப்படியான நிவாரண தொகையும், உயிரிழந்தவர்களுக்கு வேண்டுமானால் குறைவான நிவாரணத்தொகையையும் அறிவிக்கலாம்... (இரண்டுக்குமே சமமான தொகை என்றாலும் கூட பரவாயில்லைதான்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக