உலக புகழ் பெற்ற "ஷெனாய்" இசைக்கலைஞர் திரு. உஸ்தாத் பிஸ்மில்லா கான் அவர்களை ரஷ்ய அரசாங்கம் அழைத்தது...
"நாங்கள் உங்களுக்கு ரஷ்ய குடியுரிமை, சொந்த வீடு .. எல்லாம் தருகிறோம்.. எங்கள் நாட்டிற்கு வந்துவிடுங்கள்..."
அதற்கு அவர் சொன்னாராம்.... "நான் வந்து விடுகிறேன்... ஆனால் எனக்கு தினசரி விஸ்வநாதருக்கும், விஷாலாட்சி அம்மையாருக்கும் என்னுடைய இசையால் பூஜை செய்ய வேண்டும்.. அவர்களை உங்களால் ரஷ்யாவிற்கு கொண்டு வர முடியுமா..."
(காசியில் இருக்கும் சிவரூபம் விஷாலாட்சி சமேத விஸ்வநாதர்)
பிறப்பால், வளர்ப்பால், வாழ்வால் ஒரு இஸ்லாமியராக இருந்த போதும் கூட மதங்களை கடந்து இறைவனை நேசிக்கத் தெரிந்த திரு.பிஸ்மில்லாகான் அவர்கள் "என் உயிர் காசியில் தான் போக வேண்டும்" என்பதை கடைசி ஆசையாய் வைத்திருந்தாராம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக