செவ்வாய், 28 ஜூலை, 2015

நண்பன்



பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சரான பிறகு அவருடைய நண்பர் ஒருவர் தன மகளின் திருமணத்திற்காக அழைக்க சென்றார்.... அப்போது காமராஜர் அந்த திருமணத்திற்கு வர மறுத்துவிட்டார்...

நண்பரும் சற்றே கோபத்துடன் திரும்பி விட்டார்.. திருமண நாள் அன்று அந்த திருமண வீட்டின் முன் முதல்வர் காமராஜரின் வாகனம் வந்து நிற்க... நண்பர் கேட்டார்..."நீ வர மாட்டேன் என்றல்லவா சொன்னாய்..."

காமராஜர் . "நான் வருகிறேன் என்று சொன்னால் நீ பெரிய மண்டபமாக வாடகைக்கு எடுப்பாய்.. அதிகமாய் செலவு செய்வாய்..... அதற்கு நீ கடன் வாங்குவாய்.. உன்னை கடன்காரனாக்குவதா என் வேலை.... சரி சரி.... வா.. சாப்பாடு போடு..." என்றாராம்...

திகைத்த நண்பர்... "சரி வந்தது வந்தாய்.. மன மக்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு சாப்பிட போகலாமே...."

"அட நீ ஒரு ஆளப்பா... நான் கல்யாணமாகாதவன்... நான் ஆசீர்வாதம் செய்வதை உன் வீட்டு பெண்களே கூட ஆதரிக்க மாட்டார்கள்..."



# அட டா.... இப்போது வாழ்த்த வரும் பெரிய மனிதர்கள் "கவர் " வாங்கிக்கொண்டுதானடா அழைப்பிதழையே பார்க்கிறார்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக