செவ்வாய், 28 ஜூலை, 2015

என் உரிமை



கடந்த 2011 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ இ அ தி மு க மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 203. , திரு கருணாநிதி தலைமையிலான தி மு க மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 31.

31 தொகுதிகளை வென்ற திரு கருணாநிதி தலைமையிலான கட்சி ஆட்சி அமைக்கும் உரிமை கோரினாலோ, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கூறினாலோ ஏற்றுக்கொள்ள முடியுமா???

அதிகபடியான தொகுதிகளை வென்றதால் ஆட்சி அதிகாரம் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ இ அ தி மு க விற்குதான் கிடைத்தது.... இவர்கள் வெற்றி பெற்ற தொகுதியில் இருந்த அனைத்து வாக்காளர்களும் இவர்களுக்குத்தான் வாக்களித்தார்கள் என்று சொல்ல முடியாது.. ஆனால் அதிகப்படியான எண்ணிக்கையில் மக்கள் வாக்களித்ததால்தான் ஆட்சி இவர்களுக்கு கிடைத்தது..

சரி.. அதிகப்படியான மக்கள் வாக்களித்ததால் ஆட்சிக்கு இவர்கள் வந்து விட்டார்களே... இவர்களுக்கு வாக்களிக்காத மக்கள் என்ன ஆவார்கள்.. அந்த அந்த தொகுதியை விட்டு ஓடி விட வேண்டுமா??? இல்லை.. அவர்களுக்கு வாக்களிக்காத மக்களை துரத்தி விட்டு விடுவார்களா..???

இந்திய மக்கள் தொகையில் 6% மட்டுமே இருக்கும் நம்முடைய தமிழை ஆட்சி மொழியாக்க நாமே துடிக்கிறோமே.... 41% இருக்கும் இந்தி பேசுபவர்களின் மொழியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த அவர்கள் முயற்சிக்க மாட்டார்களா??

ஆயிரம் பெண்கள் இருந்தாலும் ஒரு குழந்தை என்பது தாயை நோக்கித்தான் ஓடும்... அப்படியான உணர்வைத்தான் மொழியின் மீதும் வளர்க்க வேண்டுமே தவிர.. வேறு வாய்ப்புகள் எதையும் கொடுக்காமல் மறைத்து வைத்துவிட்டு நீ தமிழை மட்டும் தான் படிக்கச் வேண்டும் என்று கட்டாயப்படுத்துதல் தவறானது.. எல்லா வாய்ப்புகளையும் கொடுக்க வேண்டியதுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியின் கடமை...

அதேபோல.. இஷ்டப்பட்டவர்கள் படித்துக்கொள்ளட்டும் என்று புத்திசாலித்தனமாக பேசுகிறார்கள்.. தமிழ்நாட்டின் தனியார் பள்ளிகளில் அந்த வாய்ப்பு இருப்பதாகவும் சப்பை கட்டு கட்டுகிறார்கள்... மூன்றடி உயரம் இருக்கும் சில மனிதர்களும் ஆறடி உயரம் இருக்கும் சில மனிதர்களும் இருக்கும் இடத்தில் உணவுப்பொருட்களை ஏழடி உயரத்தில் வைத்துவிட்டு இஷ்டப்பட்டவர்கள் சாப்பிடுங்கள் என்று சொல்வது எவ்வளவு முட்டாள் தனமோ, அதே அளவு முட்டாள் தனம்தான் இப்படி தனியார் பள்ளிகளை கை காட்டுவதும்...

ஏழடி உயரத்தில் இருக்கும் உணவை, ஆறடி உயர மனிதன் கையை நீட்டி எடுத்து சாப்பிடுவான்.. மூன்றடி உயரம் இருக்கும் மனிதனால் எப்படி முடியும்?? சாப்பிடுபவன் வாயை வேண்டுமானால் பார்க்கலாம்.... உணவை நான்கடி உயரத்தில் வைத்தால் குள்ளமானவர்கள், உயரமானவர்கள் இருவருக்குமே வாய்ப்பு கிடைக்கும்.. அப்போது சொல்லலாம்.. இஷ்டப்பட்டவர்கள் சாப்பிடுங்கள் என்று...

முதலில் அரசு பள்ளிகளில் அந்த வாய்ப்பை எற்படுத்திக்கொடுங்கள்.. பிறகு நாங்கள் முடிவெடுக்கிறோம்.. இஷ்டமா இல்லையா என்று..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக