மகாவீரர் என்ற யோகி ஆடைகள் எதுவும் உடுத்தாமல் நிர்வாணமாக இருந்தார் என்றும் அவர் அருகில் சிங்கம்-புலி போன்ற மாமிசம் உண்ணும் காட்டு விலங்குகள் கூட சர்வசாதாரணமாக உலவுவது போலவும் படங்களை கண்டிருப்போம்...
இது சாத்தியமானதா....???
மனித உடலில் இருக்கும் மூலாதாரம்,ஸ்வாதிஸ்டானம்,மணிபூரகம்,அனாஹதம்,விஷுதி,ஆக்ஞை,சகஸ்ராரம் என்ற ஏழு சக்கரங்களில் தலையாய சக்கரம் சகஸ்ராரம் ...
இந்த சக்கரத்தை எவர் ஒருவரால் செயற்படுத்த (activation) முடிகிறதோ, அவரது உடலில் இருந்து எந்த விதமான என்ன அலைகளும் அவரது அனுமதி இல்லாமல் வெளியேற முடியாது... மிக சாதாரண மனிதர்களுக்கு இவ்வாறு கட்டுப்படுத்த முடியாது.... சாதாரண மனிதர்களின் உடலில் இருந்து எழும் என்ன அலைகள் உலகின் மற்ற சக்திகளை எப்போதும் தொடர்பிலேயே வைத்திருக்கின்றன... இப்படி எழும் சக்தியானது அதே அலைவரிசையில் வேறோர் சக்தியை அடையும் போது மேலும் வலுவடைகிறது... நல்ல சக்தி நல்ல சக்தியோடும்.. கெட்ட சக்தி கெட்ட சக்தியோடும் உடனே இணைந்துகொண்டு வினையாற்றுகிறது...
உதாரணமாக ஒரு ஊருக்கு வரும் குடிப்பழக்கமுள்ள ஒருவருக்கு, அந்த ஊரில் எந்த இடத்தில் போதை வஸ்த்துக்கள் கிடைக்கும் என்ற தகவல் உடனே தெரிந்து விடும்.. அந்த ஊரிலேயே வசிக்கும் ஒருவருக்கு தெரியாத விஷயம் அதே ஊருக்கு புதிதாய் வரும் ஒருவருக்கு எப்படி தெரிகிறது??? அவரது என்ன அலைகள் வெளிப்பட்டு, அதே ஊரிலேயே இருக்கும் மற்றொரு குடிகாரரை சென்றடைகிறது.. உடனே இருவரும் பரிச்சயமாகி ஒன்றாக குடிக்க செல்வார்கள்.. அதே போலதான் ஒரு நோயாளி ஒருவரை, அவர் நிஜமாகவே எளிதில் குணமாக வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் தொடர்ந்து சந்தித்தால் அவர் மிக விரைவில் குணமாவார்....
இந்த சக்திகள் ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒவ்வொரு விதமாக மாறும்.. மேலும் மேலும் வலுப்பெறும்... சாதாரண மனிதர்கள் உடம்பில் இருந்து எழும் என்ன அலைகளானது காட்டு விலங்குகளுக்கு ஆபத்தாக தெரியும்.. அதனால் தான் அவைகள் தாக்க முயல்கின்றன.. ஆனால் மகாவீரர் போன்ற :சகஸ்ரார சக்கரத்தை முடுக்கிவிடும் வல்லமை பெற்றவர்களின் உடம்பில் இருந்து என்ன அலைகள் எதுவும் எழாத காரணத்தால் விலங்குகள் அவர்களை தாக்க நினைப்பது இல்லை...
ஆக... நிச்சயம் சாத்தியமானதே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக