செவ்வாய், 28 ஜூலை, 2015

பெண்னென்றால்....



எங்க ஆஃபீஸ் இருக்க காம்ப்ளெக்ஸ் என்ட்ரன்ஸ்ல சென்சார் கேமரா வச்ச ஒரு ஆட்டோமாடிக் கதவும்.. அதுக்கடுத்ததா ஒரு ஆட்டோ க்ளோசர் வச்ச கதவும் இருக்கும்..

கதவ திறந்துவிட்டுட்டா சென்ட்ரலைஸ்டு ஏ சி கூலிங் வெளில போய்டாம இருக்க இந்த ஏற்பாடு (இரண்டு கதவுகள் இருக்கும்) தன்னால திறந்து மூடுற ஜீபூம்பா கதவுக்கப்புறம் நாமளே திறக்க வேண்டிய கதவ திறந்து நாம உள்ளே வரும்போது, நமக்கு பின்னால யாராவது வந்தா , திறந்தகதவு மூடிடாம பிடிச்சுக்குவோம்.. பின்னால வர நபர் அந்த கதவ பிடிச்சதும் நாம விட்டுட்டு போய்டலாம்...
(நாம அப்படி பண்ணாம கதவ விட்டுட்டா பின்னால வரவர் கவனிக்காம நுழைஞ்சு, தன்னால மூடிக்கிற சிஸ்டம் வேலை செய்றப்போ கதவுல இடிச்சுக்க கூடாதுன்னு ஒரு நாகரீகம் கருதி எல்லோருமே இப்படி செய்வாங்க)

ஒருநா ஒரு வெள்ளக்காரி என் பின்னாடி வந்தா... ( கரகாட்டகாரின்னு மோகனாவ எல்லா டி வி லையும் ஏலம் போட்டப்போ பொங்கல் வைக்காத பெண்ணிய வாதிகள் "அதெப்படி வெள்ளக்காரின்னு சொல்லலாம்னு இங்க பொங்கல் வைக்க கூடாது.. ஆமாஞ் சொல்லிட்டேன்) பொண்ணா பொறந்தவ பின்னாடி வராளே... அவ மூஞ்சில கதவு இடிச்சா வலிதாங்கமாட்டாளே ன்னு நல்ல எண்ணத்துல நானும் கதவ விடாம புடிச்சேன்....

நான் என்னமோ கதவ திறந்து விடவே நிக்கிறவன் மாதிரி அந்த பொம்பள என்னை விலகிட்டு கதவுக்குள்ள நுழைஞ்சு போய்ட்டா....

அடி பாவி மக்கா.. உனக்கு போய் இரக்கப்பட்டேன் பாருன்னு எம்புத்திய வெளக்கமாத்தாலையே அடிச்சுகிட்டேன்... வேற என்னத்த செய்ய..??

# நீதி : பேயானா கூட பெண்ணுக்கு இரங்க கூடாது..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக