எங்க ஊர் பள்ளிக்கொடத்துல நாலாங்கிளாஸ்-அஞ்சாங்கிளாஸ் படிக்கிறப்போதான் நான் அங்க போடுற சத்துணவு சாப்பிட்டேன்... கமலத்தக்காதான் சமையல், சர்வீஸ் எல்லாம்.... தட்டு எடுத்துகிட்டு வரிசையா போகணும்.. ஒரு அண்டாவுல சோறு, ஒரு அண்டாவுல குழம்பு, ஒரு பக்கெட்டுல கூட்டு எல்லாம் ஒரு பெஞ்சு மேல வச்சிருப்பாங்க.... வரிசையா போய் தட்ட நீட்டினா அதுல சாப்பாடு போட்டு குழம்பு ஊத்தி, கூட்டும் வச்சு கொடுப்பாங்க....
குழம்புன்னா.. சாம்பார்... பருப்பு, முள்ளங்கி, பீட்ரூட், சௌ சௌ எல்லாம் வெட்டி போட்டிருப்பாங்க.... சில நாளைக்கு மட்டும் முருங்கக்கா, பீன்ஸ் எல்லாம் போட்டிருப்பாங்க....
புள்ளைங்க எல்லோரும் வரிசைல வரும்போது கமலத்தக்கா சோறு போட்டு குழம்பு ஊத்துவாங்க.... அந்த புள்ளையோட அப்பா-அம்மா இவங்களுக்கு ரொம்ப தெரிஞ்சவங்கன்னா சாம்பார கலக்கி காய்கறியும் அள்ளி போடுவாங்க.... தெரியாத ஆள இருந்தா மேலோட்டமா வெறும் குழமா ஊத்துவாங்க.... அப்படி குழம்பு ஊத்தும்போது வெறும் குழம்பா ஊத்தினா நம்மள மாதிரி சில ராவடி புடிச்ச பசங்க.."யக்கோவ்.. நல்லா அறிச்சு போடேன்.....உனக வீட்ல இருந்தா கொண்டு வர.... என்ன வெறும் குழமா ஊத்துற,,"ன்னு கேட்டு காய்கறி வாங்கிப்பாங்க (நாமல்லாம் அப்பவே அப்படி தான்)
அரிசி, பருப்பு, காய்கறி , எண்ணெய் எல்லாம் கவர்ன்மென்ட் கொடுக்கிறது.... பாத்திரம் , விறகு எல்லாம் கவர்ன்மென்ட் கொடுக்கிறது... கமலத்தக்கா சம்பளம் வாங்கிட்டு சமைச்சு போடுற வேலை செய்றவங்க..... இருந்தாலும்.. அவங்களுக்கு புடிச்சவங்களுக்கு மட்டும் காய்கறி... தெரியாதவங்களுக்கு வெறும் குழம்பு.... ஆனா வெறும் குழம்போ.. காய்கறியோட குழம்போ.. எல்லோருக்கும் சாப்பாடு போட்டுத்தான் ஆகணும்.. உனக்கு சாப்பாடு இல்லன்னு அவங்களால சொல்ல முடியாது....
ஏன்னா அது கவர்ன்மென்ட் கொடுக்கிறது.... இவங்க சம்பளத்துக்கு வேலை செய்றவங்க.. இருந்தாலும்.. இவங்ககிட்ட பவர் இருக்கிறதால.... வெறும் குழம்பா - காய்கறி அறிச்சு போடணுமான்னு முடிவு பண்ற பவர் இவங்களோடது....
அதே நேரம் வம்படியா சண்டை போட்டு கேக்குறவனுக்கு வேற வழி இல்லாம காய்கறி போடுவாங்க....
இப்போ எதுக்கு இந்த சுய புராணம்....?? என்னதான் சொல்ல வர....??

மத்திய அரசு எல்லா தொகுதிக்கும் வளர்ச்சி நிதின்னு ஒரு தொகை ஒதுக்கும்... அதுல சம்பளத்துக்கு சமைச்சுப்போடுற பவர் வச்சிருக்க கமலத்தக்காதான் மாதிரி பிரதமர் -ஆட்சியில இருக்க கட்சி . பவர் இருக்கிறதால் அவங்களுக்கு வேண்டியவங்களுக்கு கூடுதலா நிதி ஒதுக்குவாங்க..... வேண்டாதவங்களுக்கு நார்மலா என்ன தொகை கிடைக்குமோ அதுதான் கிடைக்கும்... வெறும் குழம்பு மாதிரி.... (அத தடுக்க முடியாது.. ஒதுக்கித்தான் ஆகணும்) ஆனா... அப்படி வேண்டாத ஆளா இருந்தாலும் "யக்கோவ்... என்ன உங்க வீட்டுல இருந்தா கொண்டு வந்து கொட்ற..... நல்லா அறிச்சு போடேன்:" என்று கேட்டு வாங்கிட்டு வர நம்மள மாதிரி.. என் தொகுதிக்கு இன்ன இன்ன தேவை இருக்கு.. எனக்கு நீ கொடுக்கிற தொகை பத்தாது.. இன்னும் வேணும் னு சண்டை போடுற ஆளுக்கு மட்டும் தான் அவன் வேண்டாத ஆளா இருந்தாலும் கூடுதல் தொகை கிடைக்கும்....
பார்க்கலாம்.. நம்ம 39 எம் பி க்களும்.. கண்டிப்பா கமலத்தக்காவுக்கு தெரிஞ்ச ஆள் இல்ல....(இருவரை தவிர) ஊத்துற வெறும் கொழம்ப மட்டும் வாங்கிட்டு விரல் சூப்பிட்டு வர போறாங்களா.. இல்ல அடாவடியா எனக்கு சேர வேண்டியது கொடுன்னு காய்கறியோட வாங்கிட்டு வராங்களான்னு...
என்ன.. அதுக்கு பாஷை தெரியனும், பேச தைரியம் வேணும்.... என் உரிமைய எனக்கு கொடுக்க நீ ஏன் பம்முறன்னு விரட்டி வாங்கத் தெரியனும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக