திங்கள், 27 ஜூலை, 2015

மனித சாமிகள்



கடவுள் என்பவர் கண்ணுக்குத் தெரியாதவர்... ஆனால் இந்து மதத்தில் மட்டும் எப்படி மனித "சாமி"கள் இருக்கிறார்கள்??? 

இந்த கேள்விக்கான விளக்கம்.,,
பத்து, இருபது என்று எண்களின் மடங்குகளை எண்ணும்போதும், நூறு , இருநூறு என்று எண்களின் மடங்குகளை எண்ணும் போதும் எட்டாம் எண்ணிக்கை வரை அது பத்தின் மடங்காகவும்- நூறின் மடங்காகவும் தான் வரும்.. ஆனால் ஒன்பதாம் எண்ணிக்கையை தொடும்போது பத்தின் மடங்கு நூறு என்றும், நூரின் மடங்கு ஆயிரம் என்றும் குறிப்பிடப்படும்... அதாவது எழுபது (ஏழு பத்துகள்) எண்பது (எட்டு பத்துகள்) தொண்ணூறு (ஒன்பது பத்துக்கள் என்றாலும் நூறு என்றே குறிக்கப்படுகிறது) அதே போல எழுநூறு, எண்ணூறு, தொள்ளாயிரம் (ஆயிரம்).... அதாவது பத்துகளின், நூறுகளின் மடங்காக இருந்தாலும் கூட நூறு / ஆயிரத்தின் அருகில் வந்து விட்ட படியால் அவைகள் நூறு மற்றும் ஆயிரம் என்ற கவுரவம் பெறுகின்றன...

அதே போலத்தான் இந்து மதத்தில் இருக்கும் சாமிகளும்.... அதாவது, மனித உருவில் இருந்தாலும் கிட்டத்தட்ட அவர்கள் கடவுளின் நிலைக்கு மிக அருகில் சென்றுவிட்டவர்கள்... மனித உடலின் ஏழு சக்கரங்களையும் இயக்கத் தெரிந்தவர்கள்.. அதனாலேயே அவர்கள் கடவுளின் நிலைக்கு அருகில் சென்றுவிட்டவர்கள்...
இவர்கள் காலங்களை கடந்தவர்கள்.. யோகிகள், ஞானிகள்.. இவர்களை சாதாரண லெளதிக விஷயங்கள் பாதிக்காது...

சாதாரண மனிதர்களுக்கு அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு சக்கரங்களை மட்டுமே இயக்கத்தேரியும்...

பத்து மற்றும் நூறின் மடங்குகள் எப்படி நூறு/ஆயிரத்தை நெருங்கிய உடன் ஒன்பதாம் எண்ணிக்கையிலேயே அந்த நூறு/ஆயிரத்திற்கான அந்தஸ்த்தை பெறுகிறதோ.. அதே போல கிட்டத்தட்ட கடவுளின் நிலைக்கு அருகில் சென்றபடியால் அவர்களும் "சாமி" என்ற அந்தஸ்த்தை பெற்றுவிடுகிறார்கள்...

அய்யா சுகி சிவம் அவர்கள் உரையிலிருந்து..

(போலிச்சாமிகளை பற்றி எல்லாம் எனக்கு தெரியாது.. அவர்கள் தந்திரசாலிகள் என்பதை தவிர )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக