முதல்நாள் மாலையில் வடித்த சோற்றை ஆறவைத்து , தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் சாப்பிட்டால் மட்டுமே அது பழைய சோறு...
ஒரு பழைய சோறு தயாரிக்கவே குறைந்தது 12 மணி நேரத்திற்கு முன்பாக திட்டமிட்டு செயல் படுத்த வேண்டும்...
ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, ஆட்சிக்கு வரும் முன்பே "நான் மூன்றே மாதத்தில் மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் " என்று அறிக்கை விட்டு விட்டு மக்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார்...
எதிர்காலத்தில் மின்வெட்டு இல்லாத தமிழகம் உருவாக இப்போது திட்டமிட்டு செயல்பட தொடங்கினால் கூட குறைந்தது அடுத்து ஐந்தாண்டுகளாவது ஆகும் அந்த திட்டங்கள் முழுமை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வர.. ஒருவேளை அப்போது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தொடரலாம்.. அல்லது மாறி கூட இருக்கலாம்... மக்கள் நலன் ஒன்றே அக்கரை என்று கருத்தில் கொண்டால் செல்வி ஜெயலலிதா அவர்கள் என்ன விதமான திட்டமிடலை இப்போது செய்திருக்கிறார்... அது எந்த நிலையில் உள்ளது , எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்..
ஒருவேளை அவர் நிஜமாகவே திட்டமிட்டு , அது தொடங்கப்பட்டிருந்தால் கூட அதை மக்களுக்கு தெளிவு படுத்தினால் மட்டுமே, அடுத்த ஆட்சியில் வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கூட "இது ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த திட்டம்.. " என்பது மக்களுக்கும் தெரியும்... அதே நேரம்.. இன்றைய திட்டமிடுதலின் பயனை நாளைக்கு அனுபவிக்கப்போகும் வேறு ஏதாவது ஒரு கட்சி.. "நாங்கள்தான் மின்சார தட்டுப்பாட்டை நீக்கினோம்" என்று பொய்சொல்லி அறுவடை செய்ய முடியாது...
முந்தைய தி மு க அரசு திட்டமிட்டு செயல்படாததால்தான் இன்றைய காலகட்டத்தில் மக்கள் இத்தனை பெரிய மின்வெட்டை சந்திக்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ... அதே அளவு உண்மை.. இன்றைய ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின் பலனை நாளைய ஆட்சிகாலத்தில் ( அது அதிமுக வோ, தி மு க வோ, தே மு தி க வோ, பா ம க வோ..) மக்கள் அனுபவிக்கப்போவதும்.... அது நல்லதோ- கெட்டதோ....
நல்லது நடந்தால் அதை நாங்கள்தான் செய்தோம் என்று சொல்வதும்.. கெட்டது நடந்தால் "முந்தய ஆட்சி காலத்தில்.." என்று சொல்வதும் தான் வழி வழியாய் வரும் அடுத்தடுத்த ஆட்சியாளர்களின் வாடிக்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக