செவ்வாய், 28 ஜூலை, 2015

லவ்வர்ஸ் பார்க்



பட்டுக்கோட்டைல மெரீனா ன்னு ஒரு கூழ் கடை இருக்கு ( பனிக்கூழ் மற்றும் பழக்கூழ்) நல்ல பரந்த இடப்பரப்பு... உள்ளுக்குள்ளே நிறைய உள் அரங்க செடிகள் (indoor plants) எல்லாம் வளர்த்து ஒரு மாதிரி ரம்மியமா இருக்கும் அந்த இடம்....

வெய்யில் நேரத்துல அங்க போய் ஒரு பழக்கூழ் ஆர்டர் பண்ணிட்டு ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து இருந்தா மனசுக்கும் இதமா இருக்கும்... பழக்கூழ் சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்... தனியாகவும், குடும்பத்தோடவும் அங்க நிறைய பேர் வருவாங்க....
அங்க "லவ்வர்ஸ்(???!) கூட வருவாங்க... நம்மூர் லவ்வர்ஸ் பத்திதான் நமக்கு தெரியுமே... நம்மூர்ல இந்த ஆதர்ச லவர்ஸ் மீட் பண்றதுக்கு தியேட்டர் தவிர பெரிசா ஒன்னும் இல்ல.. அது மாதிரி நேரத்துல இங்கன (மெரீனா) ல வந்து காதல்(??) பண்ண சில ஜோடிங்க கிளம்பி வருவாங்க...

மொசப்புடிக்கிற நாய மூஞ்ச பார்த்தா தெரியாமையா போய்டும்??? அப்படி ஒரு ஜோடி உள்ள நுழைஞ்ச உடனே கடைக் காரங்க உஷாராயிடுவாங்க.... ஒரு பத்து நிமிஷம்.. கால் மணி நேரம்.. அதுக்குள்ளே கிளம்பிடனும்.. அப்படி இல்லன்னா.. ஒரு தகவல் கொடுப்பாங்க.. உடனே ஒரு குரூப் கிளம்பி வரும்.. அந்த காதலர்கள் மேசைக்கு பக்கத்துல இருக்க டேபிள் ல உட்கார்ந்து அலப்பரை கொடுக்க ஆரம்பிக்கும்.. அப்புறம் என்ன .. அந்த காதல் புறாக்கள் "சொய்ங்ங்ங்ங்ங்" ன்னு பறந்து போய்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக