திங்கள், 27 ஜூலை, 2015

நிர்வாக வழிகாட்டி



பொதுவாகவே சில நிறுவனங்களில் வேலை செய்யும்(??) முதலாளிக்கு நெருக்கமானவர்களை அதிகாரிகளால் கண்டிக்க முடியாது.. அது மட்டுமல்லாமல் அவருடம் இருக்கும் ஒரு ஜால்ரா கூட்டமும் சேர்ந்து கொண்டு அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பார்கள்... பெரும்பாலான அதிகாரிகள் அவர்களை கண்டு பயப்படுவார்கள்.... ஆனால் நிறுவனம் வளர்ச்சி அடையவில்லை என்றால் கெட்ட பெயர் ஏற்பட போவது என்னவோ அந்த அதிகாரிக்குதான்....

இதை எப்படி சரி செய்வது என்பதை தம்முடைய போர் தொழில் பழகு என்ற நூலில் திரு இறையன்பு ஐ ஏ எஸ் அவர்கள் விளக்கமாக சொல்கிறார்....

முதலாளிக்கு வேண்டப்பட்டவரின் நடவடிக்கைகளை தொடர்ந்து ஒரு மூன்று அல்லது ஆறுமாதங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்... பிறகு அவர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எவ்விதம் தடையாக இருக்கிறார் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஒரு அறிக்கையாக தயார் செய்து "இவரால் நமது நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது" என்பதை முதலாளிக்கு சமர்பபித்து இதனால் இவரை நான் வேளையில் இருந்து நீக்குகிறேன் என்று சொன்னால் முதலாளியால் மறுக்கவே முடியாது.. அவர் எவ்வளவு நெருங்கிய சொந்தக்காரர் என்றாலும் கூட....
முதலாளியின் நெருங்கிய சொந்தக்காரரே வேளையில் இருந்து நீக்கப்படும்போது நாமெல்லாம் எம்மாத்திரம் என்ற பயத்தில் அந்த ஜால்ரா கூட்டம் ஒழுங்காக வேலை செய்ய தொடங்கும்.. நிறுவனமும் வளர்ச்சி அடையும்..........

மேற்கண்ட நிர்வாக யுக்தியை நீங்கள் "போர்த்தொழில் பழகு" படித்தும் தெரிந்துகொள்ளலாம்......
தமிழக அரசியலை தீவிரமாக கவனிப்பதன் மூலமும் தெரிந்து கொல்லலாம்....

அதாவது தி மு க என்ற கார்பொரேட் நிறுவனத்தில் பணியில் இருக்கும் CEO திரு ஸ்டாலின் அவர்களின் பதவிக்கு ஆசை பட்டு ஒழுங்காக வேலை செய்யாத South zone General Manager (தென் மண்டல மேலாளர் ) அழகிரி அவர்களை CEO அவர்களின் பரிந்துரையின் பேரில் நிறுவன Chairman கருணாநிதி அவர்கள் வேலையில் இருந்து நீக்கி இருக்கிறார்.....இதனால் நிறுவனத்தில் ஒருவேளை CEO கனவு யாருக்காவது இருந்ததென்றால் கூட அவர்கள் அடங்கி ஒழுங்காக வேலை செய்வார்கள்....

அது சரி செந்தில் கே நடேசன்.... நீங்கள் சொல்வது நிறுவனங்களுக்கு பொருந்தும்..... அது எப்படி ஜனநாயக முறைப்படி இயங்கும் அரசியல் கட்சிக்கு பொருந்தும் என்று கேட்டால்.....
நீங்கள் தான் அந்த அப்பாவி உடன் பிறப்பு..... ஜனநாயகமா... ங்கே.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக