செருப்பால அடிக்கிற மீன் இல்லைங்க... செருப்பின் அடிப்பகுதியை போல இருக்கும் மீன்....
எங்கள் பகுதியின் கடற்கரை பகுதிகளான அதிராம் பட்டிணம், மல்லிப் பட்டிணம் , ஜெகதாப் பட்டிணம் போன்ற பகுதிகளில் இருக்கும் மீனவர்கள் இப்படி ஒரு மீனை குறிப்பிடுவார்கள். இந்த மீன் செருப்பின் அடிப்பாகம் போலவே இருக்கும்.... இந்த மீன் ஏன் இப்படி இருக்கிறது என்பதற்கான ஒரு காரணக் கதையும் கைவசம் இருக்கிறது....
இலங்கையில் இருந்த சீதாபிராட்டியாரை மீட்கும் பணியில் இலங்கை தீவிற்கு பாலம் அமைக்கும் முயற்சியில் ஸ்ரீ ராமபிரான் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது படையினர் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளும் ஸ்ரீ ராம காரியத்தில் தம்மை இணைத்துக்கொண்டு வேலை செய்தன... (அணில் அவ்வாறு உதவியதால் தான் அணிலின் முதுகில் ராமர் அன்போடு தடவிக்கொடுக்க.. அது மூன்று கோடுகளாக இருக்கிறது என்ற கதையை நாம் முன்பே கேட்டிருக்கிறோம்)
அப்படி ஸ்ரீ ராம காரியத்தில் பங்கெடுக்க இந்த மீனும் ஆசை பட்டதாம்... ஆனால் இந்த மீனால் ஒரு கல்லை கூட புரட்ட முடியவில்லை.... ஆனால் ஸ்ரீ ராமனின் மீது கொண்ட பக்தியின் காரணமாக எப்படியாவது நாமும் பங்கெடுக்க வேண்டும் என்று ஸ்ரீ ராமன் கால் வைத்த இடத்தில் தம்மையே கிடத்திக்கொண்டதாம்....... ஸ்ரீ ராமனும் இந்த மீன் மீது கால் வைத்தாராம்.. அவரின் செருப்பின் அச்சு இந்த மீன் மீது படிந்து இந்த மீனும் அப்படியே ஆகி விட்டதாம்....
அதுவே செருப்படி மீன் என்று அழைக்கப்படுகிறது....
குறிப்பு:- கடல் மீனுக்கு கரையான் வச்சதுதான் பேரு.... இந்த மீனின் உருவத்தை பார்த்து அதற்காக ஒரு கதையையும் புனைந்து வழங்கப்படுகிறது....
தொடர் குறிப்பு:- கரையான் - மீனவர்கள். (கடற்)கரையில் வசிப்பவர்கள்... கரையை ஆள்பவர்கள் "கரையான்..." எங்கள் பகுதியில் வயதானவர்களால் இந்த பெயர் இன்றும் வழங்கப்படுகிறது.......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக