திங்கள், 27 ஜூலை, 2015

பொறாமை

"இவனுங்கள மாதிரி வாழணும்யா.... எந்த கவலையும் இல்ல.... எவன் என்ன சொல்வானோன்னு ஒரு பயமும் இல்ல....ஹ்ம்ம்...." என்று கிட்டத்தட்ட எல்லோருமே பெருமூச்சு விடும் வாழ்க்கை வாழ்பவர்கள் குருவிக்காரர்கள் என்று சொல்லக்கூடிய நரிக்குறவர்கள்.....



அவர்கள் வாழ்க்கை பார்த்து பொறாமை படும் யாருமே அவர்கள் வாழ்க்கையை வாழ தயாராக இல்லை.....

பொறாமை என்பது நமக்கு ஏறமுடியாத உயரத்தில் இருப்பவர்கள் மீது மட்டும் வருவதல்ல.. நமக்கு இறங்கமுடியாத பள்ளத்தில் இருப்பவர்களின் மீதும் வருகிறது.....

நமக்கான வாழ்க்கையை வாழ முடியாமல் இந்த பொறாமை தடுப்பதை மட்டும் உணரவே முடிவதில்லை.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக