செவ்வாய், 28 ஜூலை, 2015

மோடி தர்பார்..... சில கேள்விகளும்.. பதிலும்...

கேள்வி: திரு.மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாட்டின் தலைவர்களை அழைத்தது சரியா...?

பதில்: நிச்சயம் சரியான முடிவு.... இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்தப்போகும் ஒரு திறமையான நிர்வாகத்தின் மிகச்சாதுர்யமான காய் நகர்த்தல். இதன் மூலம் சார்க் அமைப்பில் இருக்கும் மற்ற நாடுகளின் மனோநிலை என்ன என்பதையும், இந்திய எல்லைக்குள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவ்வப்போது மூக்கை நுழைக்கும் சீனாவின் எதிர் நடவடிக்கைகளையும் அறிய உதவும்...

கேள்வி: திரு.ராஜபக்சே அவர்களை அழைத்தது சரியா...? இது தமிழர் விரோத செயல் இலையா??

பதில்: நிச்சயமாக இது தமிழர் விரோத செயல் அல்ல... அவரை அழைக்காமல் விட்டிருந்தால் அதுதான் இலங்கை தமிழர் விரோத நடவடிக்கை... கவனிக்கவும்.. இலங்கைத் தமிழர் விரோத நடவடிக்கை.. திரு.ராஜ பக்சே ஒன்றும் நம் வீட்டு அருகில் கொட்டகை போட்டு குடியிருப்பவர் அல்ல.... நாம் அவர் மீது நேரடியான ஆதிக்கத்தை செலுத்தி விட... அவர் ஒரு நாட்டின் அதிபர்.... உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட, ஐ நா சபையில் பிரதிநிதியை கொண்ட ஒரு நாட்டின் அதிபர். அவர் மீது நேரடியான ஆதிக்கத்தை நாம் செலுத்த முடியாது.. ஆனால் அவரை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.. அதற்கான முதல் முயற்சி தான் இது. இலங்கைத் தமிழர்களுக்கு நலம் பயக்கும் எந்த முயற்சியை இந்திய அரசாங்கம் செய்வதென்றாலும் அதனை திரு.ராஜபக்சே அரசின் மூலம் தான் செய்ய முடியுமே தவிர நம்மால் நேரடியாக செய்ய முடியாது.... இப்போது அவரை விருந்தினராக அழைத்த ராஜ தந்திர நடவடிக்கை மூலம் நாள் அங்கிருக்கும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் அவர் நிச்சயம் அதை கவனத்தில் கொள்வார்.... ஆனால் இன்று அவரை புறக்கணித்து விட்டு, நாளை அவரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் உடனே ஓடி வர அவர் என்ன இந்திய அடிமையா என்ன??

கேள்வி: இது தமிழ்நாட்டின் 6 கோடி தமிழர்களை புண் படுத்துவதாகாதா????

பதில்: இல்லை.. நிச்சயமாக இல்லை.. இந்தியன் என்ற உணர்வுடைய எந்த தமிழனையும் இது வருத்தப்பட வைக்காது.. மாறாக மகிழ்ச்சியடைய வைக்கும்... ஏனென்றால் இலங்கை தமிழர்களுக்கு எப்படியாவது ஒரு நல்ல காலம் பிறக்காதா என்று ஏங்கிய தமிழர்கள், நிச்சயம் இந்த அரசால் ஒரு நல்ல வழி பிறக்கும் என்று நம்புவார்கள்... ஆனால் இலங்கை தமிழர் பிரச்சினையை அரசியல் சுய லாபத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் தலைவர்களும் , அவர்கள் பின்னால் விபரம் தெரியாமல் கூடும் கும்பலை வேண்டுமானால் புண்படுத்துவதாக அமையலாம்...




கேள்வி: திரு.வைகோ, திரு.சீமான், திரு.நெடுமாறன், திரு.ராமதாஸ் உள்ளிட்டவர்களும், தமிழக அரசும், தி மு க தலைவரும்.. ஏன் காங்கிரசே கூட இதை கடுமையாக எதிர்க்கிறார்களே...??

பதில்: எல்லாமே சுயநல வாதிகள்.... திரு.வைக்கோ, திரு.சீமான், திரு.நெடுமாறன் போன்றோர் ஈழம், தமிழர்கள் என்று உசுப்பி விட்டு விட்டுத்தான் கடந்த காலங்களில் அரசியல் செய்கிறார்கள்.. இந்த விஷயம் மட்டும் இல்லை என்றால் இவர்களால் நிலைத்திருக்க முடியாது.. ஏனென்றால் "தமிழ், தமிழன்" என்ற வார்த்தைகளை கேட்டாலே எளிதில் உணர்ச்சிவசப்படும் அப்பாவித்தமிழர்களை, அவர்களின் இர க்க குணத்தை பயன்படுத்தியே அரசியல் செய்யும் தலைவர்கள்(???) இவர்கள்... தமிழக அரசுக்கு மத்தியில் அமையும் ஆட்சியின் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு இது... 

தி மு க தலைமைக்கோ , சுமார் நாற்பது ஆண்டுகாலமாய் "தமிழ்-தமிழர் என்று உசுப்பிவிட்டு தம் பக்கம் வைத்திருந்த தமிழர்களை, இலங்கை தமிழர்கள் என்ற ஒரு விஷயத்தை பயன்படுத்தி மற்றவர்கள் எளிதாய் நகர்த்திக்கொண்டு போய் விடுவார்களோ என்றும்.... தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா தமிழர்களை ஆதரவை பெற்று விடுவார்... என்ற காரணத்தாலும் , ஒரே ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாத மோசமான நிலையாலும், வேறு வழியே இல்லாமல் திரு. ராஜபக்சே வருகையை எதிர்த்தே ஆகவேண்டிய என்ற கட்டாயம்.... 

காங்கிரசுக்கும் அதே நிலை தான்.. எல்லோரும் "ஈழத்தமிழர்கள்.. தமிழ்.. தொப்புள் கொடி.." என்று உணர்ச்சி வேட்டை நடத்தும் போ து நாமும் அப்படி கூவவில்லை என்றால் மொத்தமாகவே காணாமல் போய் விடுவோம் என்ற பயம்... கடந்த ஆட்சி காலத்தில் இலங்கைக்கு எம் பி க்கள் குழுவை அனுப்பியது, இந்தியாவிற்கு வந்த திரு ராஜ பக்சே அவர்களை வரவேற்று விருந்தளித்தது, இலங்கைக்கு நிதி உதவி செய்தது , ராணுவத்திற்கு பயிற்சி அளித்தது என எல்லாவற்றையும் செய்துவிட்டு இன்று பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அந்த நாட்டின் அதிபரை அழைக்கும் போது எதிர்ப்பது என்பது கேவலமான நாடகம்... எதிர்கட்சியாக கூட வர முடியாதவர்கள் "எதிரிக்கட்சியாக" இருப்பதன் கீழ்த்தரமான வெளிப்பாடுதான் காங்கிரஸ் கட்சியின் இந்த எதிர்ப்பும்...

கேள்வி: 6 கோடி தமிழர்களை மோடி அவமதித்து விட்டார் என்றும்.... காங்கிரசை துடைத்து எறி ந்ததை போல பி ஜே பியையும் துடைத்து எறிவோம் எனவும் வைக்கோ உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும், தமிழ் அமைப்புகளும் கூறுகின்றனவே...??

பதில்: முதலில் ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள்.... தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு எல்லையில் பொய் நின்றுகொன்று வெளிப்புறம் பார்த்தபடி "எனக்கு பின்னால் மொத்த தமிழகமும் திரண்டு இருக்கிறது" என்று சொல்லும் முட்டாள்தனமான கருத்துதான் "6 கோடி தமிழர்களையும்" என்ற வாதம்... அரசியலில் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்பதற்காகவும், ஏதாவது ஒரு அமைப்பின் தலைவராகவே நீடிக்க வேண்டும் என்பதற்காகவும் சில்லறை அரசியல் கட்சிகளும் நாலைந்து பேர் கொண்ட மாபெரும் தமிழர் அமைப்புகளும் சொல்லும் நகைச்சுவையான கூற்றுதான் "6 கோடி தமிழர்களையும்" என்ற கூற்று.... தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தசம விழுக்காடுகள் கூட இலாத ஒந்த "ஒரு சிலர்" ஒட்டு மொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியை போல பேசுவதையும், அது ஊடகங்களில் ஒளிபரப்பப்படுவதால் அது உண்மையாகவே ஆகி விட்டதை போல அவர்கள் கனவில் மிதப்பதையும் ரசித்து சிரிக்கலாம்... ஆனால் ஏற்க முடியாது...

அதோடு தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது கடந்த பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதாரக்கொள்கை, மலிந்துவிட்ட ஊழல்கள், விலைவாசி ஏற்றம் என்ற பல காரணங்களை உள்ளடக்கியதே தவிர இலங்கை தமிழர் பிரச்சினை ஒரு காரணமே அல்ல... அப்படி இலங்கை தமிழர் பிரச்சினைகாகத்தான் காங்கிரஸ் ஒழிக்கப்பட்டது என்றால் சதா சர்வகாலமும் இலங்கை தமிழர்கள் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் ம தி மு க வோ, அவ்வப்போது சந்தர்ப்பத்திற்காக இலங்கை தமிழர் பிரச்சனைகளை கையிலெடுக்கும் திருமா, ராமதாஸ் போன்றவர்களோ தானே வெற்றி வாகை சூடி இருக்க வேண்டும்....

கேள்வி: பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாமல், டெல்லியில் போராட்டம் நடத்தி கைதாகி இருக்கிறாரே திரு வைகோ அவர்கள்???

பதில்: வை கோ அவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்த போது வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன்... தமிழக மக்களின் தேவைகளை, அவர் சார்ந்த தொகுதி மக்களின் தேவைகளை பாராளுமன்றத்திலே உரத்து ஒலிக்க கூடிய ஒரு சிறந்த உறுப்பினரை அனுப்ப விருதுநகர் மக்கள் தவறி விட்டார்கள் என்று கோடா நினைத்தேன்... ஆனால் அவர்கள் சரியாகத்தான் முடிவெடுத்து இருக்கிறார்கள் என்பதை வைக்கோ தன்னுடைய சிறுபிள்ளைத்தனமான தொடர் நடவடிக்கைகளால் உறுதி செய்கிறார்... வைக்கோ ஒரு நல்ல மனிதராக இருக்கலாம்.. ஒரு நல்ல தலைவருக்கான தகுதி சற்றே குறைவாக .. இல்லை இல்ல.. நிறையவே குறைவாக இருபதாகவே எனக்கு தோன்றுகிறது... இந்தியாவின் மத்தியில் அமரப்போகும் அரசாங்கத்தை வாழ்த்தி, வரவேற்று முதலில் அவர் சார்ந்த தமிழக மக்களுக்கு தேவையானவற்றை குறித்து பேசி விட்டு அதன் பிறகு இலங்கை பிரச்சினையை எடுப்பாரானால் அவர் ராஜ தந்திரி.. மாறாக அரசு அமரும் முன்பாகவே இலங்கை.. தமிழர் என்று வழக்கமான பல்லவியை பாடப்போவதை பார்த்தால் இவர் தோற்றதே நலம்..... இவர் அரசியலில் இருந்து ஒதுங்கி குடும்பத்தினருடன் செட்டில் ஆவது இந்திய தமிழர்களுக்கு மட்டுமல்ல.. இலங்கை தமிழர்களுக்கும் கூட நலமளிக்கும்...

திரு.வைக்கோ, திரு.சீமான், திரு.திருமாவளவன், திரு.நெடுமாறன்.. இன்னும் பிற சில்லரை கட்சி தலைவர்கள் தங்கள் பின்னால் கூடும் நாலு முதல் நாற்பது உணர்வாளர்களை (??) தூண்டி விட்டு, தாம் தலைவனாக நீட்டிக்க செய்யும் நாடகத்தில் பாதிக்கப்படுவது இலங்கை தமிழர்கள் தான்.... 

கேள்வி: திரு மோடி அவர்கள் முதல்வராக பதவி ஏற்ற போது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இப்போது விழாவை புறக்கணித்தது பற்றி..??

பதில்: ஒரு வார்த்தையில் சொல்வதென்றால்.............. பொறாமை.... குஜராத் மாநில முதல்வராக பதவி ஏற்ற பொது ஐவரும் கலந்து கொண்டார் என்றால் அவரும் முதல்வர், தானும் மாநில முதலமைச்சர் என்ற சமமான நிலைமை.. ஆனால் இன்று.. "எப்படியாவது தமக்கு பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து விட வாய்ப்பு கிடைக்கும்" என்று இலவு காத்த கிளியாக இருந்தவருக்கு அந்த வாய்ப்பு பரிபோனதல்லாமல், இவர் வெற்றி பெற்ற 37 எம் பி க்களின் ஆதரவை கூட நாடும் அவசியமின்றி திரு மோடி ஆட்சியில் அமர்ந்தது தாங்கமுடியாத முடியாத பொறாமையை தூண்டி விட்டிருக்கிறது.. அதற்கு காரணமாக சொல்லிக்கொள்வதுதான் இந்த திரு.ராஜபக்சே எதிர்ப்பு...

கேள்வி: கடந்த காலங்களில் மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இருந்த முக்கியத்துவம் இப்போது அறவே இல்லை என்றும்.. இதனால் தமிழகத்திற்கான நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்காது என்றும் சொல்லப்படுகிறதே...???

பதில்.. ஹா ஹா ஹா.... மன்மோகன் சிங் அரசில் பதவி வகித்த திரு தயாநிதி மாறன், திரு ராஜா , திரு அழகிரி போன்றோரும், திரு வாஜ்பாய் அரசில் அமைச்சர்களாக இருந்த திரு அன்புமணி, திரு வெளி, திரு எ கே மூர்த்தி போன்றோர்களும் ஏதோ அந்த அந்த துறைக்கான உலக வர்த்தக, பொருளாதார, தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றியதை பார்த்து, இந்தியாவை வழிநடத்த இவர்கள் தான் சரியானவர்கள் என்று அந்த ஆட்சியில் மந்திரி பதவி கொடுக்கப்பட்டதை போலவும்... அப்படி மந்திரி பதவியை பெற்ற அவர்கள்தான் தமிழ்நாட்டை உச்சபட்ச உயரத்திற்கு உயர்த்தியது போலவும் இருக்கிறது உங்கள் கேள்வி.... 

கூட்டணி மந்திரி சபையில் சில எம் பிக்களை வைத்துக்கொண்டு மிரட்டி வாங்கப்பட்ட பதவிகள் அவை.. அப்படி பெற்ற பதவிகளை அவர்கள் வளர்ச்சிக்கும், அவர்கள் தலைமையின் வளர்ச்சிக்கும் தான் பயன் படுத்தினார்களே தவிர வேறு எதையும் செய்துவிடவில்லை அவர்கள்.. இந்தியாவின் ஒரு முன்னேறிய மாநிலமாக, சுமார் ஆறுகோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசில் இருந்து என்ன பங்கு வர வேண்டுமோ அது வரும்.. ஆனால் மக்களின் தேவைகளை எடுத்துச்சொல்ல தான் நாம் 39 எம் பிக்களை அனுப்பி இருக்கிறோமே... இவர்கள் அதை அங்கே எடுத்து சொன்னாலே போதுமானது.. மந்திரி பதவிதான் வேண்டும் என்ற அவசியம் இல்லை.... மந்திரி பதவிகளே இல்லாத மாநிலங்கள் எல்லாம் அழிந்து விடுமா என்ன????

கேள்வி: கடைசியாக ஒரு கேள்வி... அண்டை நாடுகளுடனான உறவை எப்படி பேணுதல் வேண்டும்.. இலங்கை பிரச்சினைக்கு நிலையான தீர்வுதான் என்ன என்பதை பற்றி ஒரு சாதாரண குடிமகனான உங்களுக்கு இவ்வளவு தெளிவு இருக்கும் போ து , மெத்த படித்த, அனுபவம் மிக்க..., திரு. நெடுமாறன், திரு,.வைக்கோ போன்றவர்களுக்கு அது தெரியாதா...?? பிறகு ஏன் அவர்கள் இலங்கை பிரச்சினையில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள்...???

பதில்: நிச்சயமாக..... என்னை விட அவர்களுக்கு இன்னும் கூடுதல் விபரங்கள் தெரியும்.. ஆனால் எனக்கு யாரையும் உசுப்பிவிட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. அவர்களுக்கு அரசியலில் நிலைத்து தலைவனாகவே நீடிக்கும் அவசியம் இருக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக