திருமதி அலேமேலு ஆச்சி அவர்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்...
தன்னுடைய பள்ளிப்படிப்பை இரண்டாம் வகுப்பிலேயே துறந்து விட்டு தம்பிகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றவர்... வாழ்க்கையை படிக்க ஆரம்பித்தவர்... ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தில் இரண்டாவது மருமகளாக வாழ்க்கைப்பட்டு மிக சாதாரணமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் இவர் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.... தாம்தான் படிக்கவில்லை.. பிள்ளைகளாவது படிக்கட்டும் என்ற சராசரி கனவுடன் வாழ்ந்த இவர் சென்னையை கூட பார்த்ததில்லை.. அதிகபட்சம் அறுபது கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளாகவே சற்றேறக்குறைய தம்முடைய எழுபதாண்டுகால வாழ்க்கையை வாழ்ந்து கழித்தவர்....
இவருக்கு செல்போனில் வரும் கால்களை மட்டுமே "பச்சை பட்டனை"அமுக்கி பேசத்தெரிந்தவர்.... டீ வீ யில் சேனல் மாற்ற கற்றுக்கொள்ள விரும்பாதவர்.... வீடு -வாசல்- வயல்- வரப்பு- மாடு என்று எல்லைக்குள்ளேயே வாழ்வின் பெரும்பகுதியை கழித்தவர்
இராமநாதபுரம்-புதுக்கோட்டை மாவட்டங்கங்களில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் சில பல குடும்பங்கள் அந்த பகுதிக்கு பஞ்சம் பிழைக்க வந்ததில் சிலர் அந்த பகுதியிலேயே தங்கி விட்டார்கள்... நாளடைவில் அவர்கள் ஓட்டுரிமை, ரேஷன் கார்டு என்ற அங்கீகாரங்களை பெற்றாலும் கூட அந்த பகுதியில் காலம் காலமாய் பூர்வீகமாக வசிப்பவர்கள் அவர்களை வந்தாரங்குடி (வந்து குடியேறியவர்கள்) என்றே குறிப்பது வழக்கம்...
சரி.. அலமேலு ஆச்சியை பற்றி சொல்ல வந்துவிட்டு வந்தாரங்குடிகள் பற்றி எதற்கு விளக்கம்...??? தொடர்புடைய விஷயமாகையால் முன்கூட்டியே ஒரு சிறு குறிப்பை கொடுத்தேன்.....
நேற்று அவரை சந்தித்தார் ஒரு அரசியல் கட்சியின் உள்ளூர் பிரதிநிதி ஒருவர்... அந்த பகுதியில் அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு வாக்களிக்கும் படியும்.. ஒரு ஓட்டுக்கு ரூபாய் ஐநூறு வழங்குவதாகவும் சொல்லி இருக்கிறார்...
அவருக்கு அலமேலு ஆச்சி எப்படி பதில் சொன்னார் தெரியுமா?????
"ஓட்டு போட்றேன்பா...... பணம் வாங்கிகிட்டு ஓட்டு போட நான் என்ன வந்தாரங்குடியா.......?? "
நான் இந்த ஊரின் பூர்வீக உரிமை உடையவள்.... இந்த நாட்டின் பிரஜை.... என்னுடைய கடமையை செய்ய நான் ஏன் பணம் வாங்க வேண்டும்.... என்னுடைய வேலையை செய்ய எனக்கு கூலி கொடுக்க நீங்கள் யார் என்ற பற்பல கேள்விகளை ஒரே கேள்வியில் உள்ளடக்கி கேட்ட அலமேலு ஆச்சியின் கர்வம் மிரளத்தான் வைக்கிறது......
அவரது கருவறையில் வளர்ந்த எனக்கே மிரட்சியாக இருக்கிறதெனில்........ உங்களுக்கு??????????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக