பதிவு செய்த நாள் ஆகஸ்ட் 15 - 2014
விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழகத்தில் அரசியல் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கும் சில்லறை அமைப்புகளும், அகதிகள் என்ற போர்வையில் ஐரோப்பா , ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் ஒட்டிக்கொண்டு வசதியாய் வாழ்ந்துகொண்டிருக்கும் நாட்டுக்கு திரும்பி வருவதில் விருப்பமில்லாத புலம் பெயர் இலங்கை தமிழர்களும் அந்த இயக்கத்திற்கு கொடுத்த பரிசு இது...
விடுதலை புலிகள் இயக்கம் மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசு சொல்லிக்கொண்டிருந்தாலும் அந்த அமைப்பில் இருந்தவர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்திருப்பது என்னவோ உண்மைதான்... அந்த களப்போராளிகள் தங்கள் இயக்கத்தின் உயிரிழப்புகள், சுமார் முப்பதாண்டுகால போராட்டம் வீணாகி விடக்கூடாது என்று நினைப்பதும் உண்மைதான்... அவர்கள் மிக ரகசியமாக தங்கள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டிருப்பார்கள்... "அழிந்துவிட்டது" என்று விளம்பரப்படுத்தப்படுவது கூட அவர்கள் மீண்டும் நிலையாய் எழுச்சி பெற சரியான கால அவகாசத்தை பெற்றுக்கொடுக்கும்... அழிந்து விட்டதாய் சொல்லப்படும் ஒரு இயக்கத்தின் மீதான தடையை பல்வேறு நாடுகள் காலாவதியாக்கும்...
ஆனால் அப்படி ஒரு நிலைமை வந்தால் தமிழகத்தில் "அல்லக்கை" சில்லறை உணர்வாளர்கள் பிழைப்பு கருகி விடும்.... அகதிகளாய் சென்று வசதியாய் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப கட்டாயப்படுத்தப்படலாம்.... ஆகவே தான் அவர்கள் "விடுதலை புலிகள் இருக்கிறார்கள்... திரும்ப வருவார்கள்.... போராடுவார்கள்.. சிங்களர்களை ஒழிப்பார்கள்" என்றெல்லாம் தொடர்ந்து மூச்சு விடாமல் கூவி தங்கள் வசதிகளை, பிழைப்பை தக்கவைத்துக்கொள்கிறார்கள்..
நிஜமாகவே அந்த தமிழர்களின் உரிமை மீட்கப்பட விடுதலை புலிகள் மீண்டு வந்தே ஆகவேண்டும் என்று நினைப்பிருந்தால் "அவர்கள் அழிந்துவிட்டார்கள்... இனிமேல் வரவே மாட்டார்கள் " என்பதை மட்டுமே உரக்க சொல்லிக்கொண்டு ரகசியமாக நகர்த்தலை முன்னெடுப்பார்கள்...
இந்திய அரசோ.. எந்த ஒரு அரசோ "விடுதலை புலிகள்" மீதான தடையை ஓராண்டோ , இரண்டாண்டோ நீட்டித்தால் கூட அதை பற்றி விவாதிக்கவோ, விமர்சிக்கவோ யாரும் இல்லை என்றால் அந்த அரசுகள் "நிஜமாகவே அந்த இயக்கம் அழிந்துதான் போய் விட்டது... இனிமேல் அதை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று அந்த தடையை மறுபடியும் நீட்டிப்பதை பற்றி யோசிக்காது... அப்படி யோசிக்காத நேரத்தில் அந்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னிலும் பலமாய் தங்களை வளர்த்துக்கொண்டு அவர்கள் களமாட வாய்ப்பு கிடைக்கும்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக