செவ்வாய், 28 ஜூலை, 2015

காவிரி அரசியல்



கிராமங்களில் இரண்டு குடும்பத்தினருக்கு இடையே ஏதாவது ஒரு சண்டை நடக்கும்... இவர்கள் அதிகபட்சம் பங்காளிகளாகவோ, உறவுக்காரர்களாகவோ இருப்பார்கள்.. (பெரும்பாலும் அற்ப காரணங்களாகவும், சில நேரம் அவசிய காரணமாகவும் இருக்கும்) ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள்... இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் சண்டைகாரரின் சொந்தக்காரர்களிடம் எல்லாம் கூட பேச மாட்டார்கள்...

அப்படியான எதிரிகள் ஒரு வீட்டில் திருமண விசேஷம், காதுகுத்து, புதுமனை புகுவிழா போன்ற விசேஷங்களுக்கு கலந்துகொள்ள மாட்டார்கள்... அவ்வாறான நேரங்களில் ஊரில் இருக்கும் பெரியமனிதர் உடன் சென்று விசேஷம் நடத்தும் வீட்டுக்காரர், அந்த சண்டை போட்டுக்கொண்டு பேசாமல் இருப்பவரை வற்புறுத்தி அழைப்பார்... அழைக்கப்பட்டவரோ, பல காரணங்களை சொல்லி தவிர்ப்பார்.. இவரும் விடாமல் வற்புறுத்த, பிறகு அவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிப்பார்...

அதேநேரம், அப்படி சண்டை போட்டுக்கொண்டு பேசாமல் இருக்கும் நேரங்களில் ஒருவீட்டில் திடீரென ஏதாவது அசம்பாவிதமோ, மரணமோ என்றால் உடனடியாய் ஓடிப்போய் நிற்பது அந்த சண்டைகாரராகத்தான் இருப்பார்.. அப்போது எவ்விதமான அழைப்பிற்கும் காத்திருக்க மாட்டார்... இதுதான் இன்றளவும் கிராமங்களில் இருக்கும் வழக்கம்...

அட நாதாரிங்களா.... (மன்னிக்கவும்..) காவிரி நதிநீர் ஆணையம் என்பது தமிழக விவசாயிகள் வீட்டில் நடக்கு இழவுடா... இதுல என்ன என்னை கூப்பிடல... எங்களையும் கூப்பிடனும்னு ஒரு குரூப்பும், அதெல்லாம் நான் கூப்பிட மாட்டேன் ன்னு ஒரு குரூப்பும் சவால் விடறீங்க???

காவிரி பிரச்சினையில் விவசாயிகள் நலன் சார்ந்து தமிழக அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் எங்கள் ஆதரவு உண்டுன்னு நீ சொன்னா என்ன உங்க அப்பன் வீட்டு சொத்து நாசமா போய்டும்????

ஏலே.. எல்லோரும் வாங்கடா.. ஒண்ணா போயி நம்ம உரிமைக்காக குரல் கொடுப்போம்னு நீதான் கூப்பிட்டா என்ன உன் பரம்பரை கௌரவம் கொறைஞ்சு போய்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக