தற்போதைய பெரிய அரசியல் கட்சிகளுக்கு அனைத்து தேர்தல்களிலும் ஒரே சின்னமே வழங்கப்படுகிறது.. அ தி மு க என்றால் இரட்டை இல்லை., தி மு க என்றால் உதய சூரியன், காங்கிரஸ் என்றால் கை, பா ஜ க என்றால் தாமரை...
ஒரு காலத்தில் அந்தந்த கட்சியில் இருந்து ஒரு நல்ல, மக்கள் நலம் விரும்பும் , நிர்வாகத்திறமை மிகுந்த தலைவர்கள் இருந்திருக்கலாம்.. ஆனால் காலப்போக்கில் அந்த கட்சிகள் கயவர்களின் கைக்கு மாறி இருக்கலாம்.. ஆனால் அந்த நல்ல தலைவர்கள் மூலம் மக்கள் மனத்தில் பதியப்பெற்ற அந்த சின்னங்களை பயன் படுத்தி தற்போதைய அரசியலில் மையம் கொண்டிருக்கும் நாசகார சக்திகள் ஆட்சி பீடத்தில் அமர்வது எந்த விதத்தில் நியாயம்?
அந்த சின்னங்களை மக்கள் மனதில் பதிய வைத்த நல்ல தலைவர்களின் பால் மக்கள் கொண்ட ஈர்ப்பை, விசு வாசத்தை, நன்றி உணர்ச்சியை இப்போதுள்ள கயவர்கள் அனுபவிப்பதை தடுக்க வேண்டுமானால் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னங்களை வழங்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
இதன் மூலம் தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர்கள், மக்களிடம் நிலையான செல்வாக்கு பெற்றவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவதோடு.... மக்களின் வரிப்பணத்தில் பறக்கும் குதிரைகள், அலங்கார தோரண வாயில்கள் அமைப்பதன் மூலம் தங்கள் கட்சியின் சின்னத்தை மக்கள் மனதில் தொடர்ந்து பதியவைக்கலாம் என்று எண்ணம் ஏற்படுவதை தடுப்பதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாகாமலும் தடுக்கலாம்.....
தேர்தல் கமிஷன் கவனிக்குமா...????

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக