திங்கள், 27 ஜூலை, 2015

சூப்பர் ஹெர்குலஸ்



இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய சரக்கு விமானமான சூப்பர் ஹெர்குலஸ் விமானம் ஒன்று இன்று (மார்ச் 28-2014)  விபத்துக்குள்ளானது... இந்த விமானத்தை பற்றி சில தகவல்கள்...

லாக்கிட் மார்டின் என்ற அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான இது நான்கு டர்போப்ரொப் என்ஜின்களை உள்ளடக்கியது... மணிக்கு 670 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் இந்த விமானம் ராணுவ டாங்கிகள், பீரங்கிகள், ட்ரக்குகள் ஆகியவற்றை ராணுவ தளங்களுக்கும், போர் தளங்களுக்கும் எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..

1996 ல் ராணுவ பயன்பாட்டிற்கு வந்த இந்த விமானம் அமெரிக்க விமானப்படை- ராணுவத்தில் முக்கிய பங்காற்றுகிறது.. இந்திய ராணுவம் 6 சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களை கடந்த ஆண்டு (2013) வாங்கியது... ஒரு விமானத்தின் விலை 1.01 பில்லியன் டாலர்கள்.

இந்த ஆறு விமானங்களும் மூன்று ஆண்டுகள் காலக்கெடுவுக்குள் கொடுப்பதாக ஒப்பந்தம்...

பறந்துகொண்டு இருக்கும் போதே எரிபொருள் நிரப்பக்கூடிய வசதி பெற்றது...

கடந்த ஆண்டு சீனா அத்து மீறி இந்திய எல்லைக்கும் நுழைந்த சில நாட்களில், லடாக் பகுதியில் உள்ள ராணுவ விமானதளத்தில் இந்த சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தை தரை இறக்கியதன் மூலம் இந்தியா சீனாவிற்கு மறைமுக சவால் விட்டதாக ராணுவ/சமூக/பத்திரிகை பார்வையாளர்களால் கணிக்கப்பட்டது...

இவ்வளவு செயல்திறனும், சக்தியும் மிக்க ஒரு விமானம் விழுந்து நொறுங்கி விட்டதாக சொல்வது சந்தேகத்திடமான ஒரு விஷயமாகவே படுகிறது... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக