திங்கள், 27 ஜூலை, 2015

உணவு சங்கிலி

இந்த உலகம் தொடர்ந்து இயங்க மிக முக்கிய தேவையான உணவு சங்கிலி ஒரு முக்கோண வடிவில் படைக்கப்பட்டுள்ளது. ஒரு முக்கோணத்தின் மேற்பகுதி அளவு ஊன் உண்ணிகளும், நடுப்பகுதி அளவு தாவர உண்ணிகளும் அடிப்பகுதி அளவு தாவரங்களும். 

இந்த உணவு விகிதத்தால் மட்டுமே உலகம் சமநிலைப்படும். இந்த முக்கோணத்தில் எதோ ஒன்று அதிகமானால் உலகின் சமநிலை கெட்டுவிடும். உதாரணமாக பூனைகள் முக்கோணத்தின் மேற் பகுதி(1 ), எலிகள் முக்கோணத்தின் நடுப்பகுதி(10 ), தானியங்கள் கீழ் பகுதி என்றால் (100 ) மட்டுமே இந்த உலகம் தொடர்ந்து இயங்கும். இப்படி இருக்கும் போது எலிகள் தானியங்களை சாப்பிட்டு அழிக்கும்... இதற்கு ஈடு செய்யும் வேகத்தில் தானிய உற்பத்தி நடக்கும்.. இந்த எலிகளை பூனைகள் உண்டு அழிக்கும்... அதனை ஈடு செய்யும் வேகத்தில் எலிகளின் இனப்பெருக்கம் இருக்கும்....


இதற்கு மாறாக பத்து பூனைகள் ஒரு எலி இருந்தால்.. பூனைகளுக்கு உணவு கிடைக்காது..... நூறு எலி ஒரு தானியம் இருந்தால்.. எலிகளுக்கு உணவு கிடைக்காது.... அதே நேரம்... பூனைகள் இல்லை என்றால்... எலிகள் அதிகமாகி தானிய உற்பத்தியையே நாசம் செய்துவிடும்.

உதாரணமாக பூனையின் கர்ப்ப காலம் சுமார் இரண்டு மாதங்கள்... இவைகள் வருடத்திற்கு அதிக பட்சமாக 150 குட்டிகளை ஈனுகின்றன....

ஆனால்.. எலியின் கர்ப்ப காலம் 29 நாட்கள் மட்டுமே.... ஒரு ஈற்றுக்கு சராசரியாக ஆறு குட்டிகள்..... ஒரு ஜோடி எலி இருந்தால் சுமார் 18 மாதங்களிலேயே அது ஒரு லட்சம் எலிகள் ஆகி விடுமாம்.... 

ஒன்றரை வருட கால பூனை இனப்பெருக்கத்தை விட எலிகளின் இனப்பெருக்கம் 1 : 40 ன்ற விகிதத்தில் இருக்குமாம்.... அதாவது ஒரு பூனை பிறந்தால் சுமார் நாற்பது எலிகள் பிறந்திருக்கும். அந்த ஒரு பூனை பிறக்கா விட்டால்........ அல்லது அந்த பூனை சைவமாகி விட்டால்....... எலிகள் பல்கி பெருகி பெருகி.. மொத்த தானியங்களையும் அழித்து விடும்......

## இதிலிருந்து தங்களுக்கு சொல்ல விரும்புவது.. கோழி, ஆடு போன்றவற்றை உண்ணும் போது எந்த உறுத்தலும் இல்லாமல் ரசித்து சாப்பிடவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக