செவ்வாய், 28 ஜூலை, 2015

சிவா ஜி



திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி அவர்கள் ஒரு திருவிழாவில் சொற்பொழிவு நிகழ்த்திய போது முன் வரிசையில் அமர்ந்திருந்த சிறுவர்களிடம் கேட்டார்.... "எம்பெருமான் முருகனுடைய தந்தை யார் என்று தெரியுமா...? "

அந்த திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் திருவிளையாடல் படம் திரையிட்டிருக்கிறார்கள்...திருவிளையாடல் படத்தில் முருகனின் தந்தையாக திரு சிவாஜி நடித்திருந்ததை கண்டிருந்த அந்த சிறுவர்கள் "சிவாஜி" என்று சத்தமாக சொன்னதும் மேடையில் இருந்த மற்றவர்கள் சிரித்தார்களாம்...

அப்போது வாரியார் சுவாமிகள் சொன்னாராம்.. " எதற்காக சிரிக்கிறீர்கள்...?? அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்கள்... அவர்கள் பள்ளிப்பாடங்களில் நேருஜி, காந்திஜி என்று பெரியவர்களை மரியாதையாக சொல்ல "ஜி" என்று சேர்த்து சொல்ல பழகி இருக்கிறார்கள்.. அந்த நினைவில்தான் அவர்கள் "சிவன்" என்பதை.. "சிவாஜி" என்று சொல்கிறார்கள்...

ஒரு சாதாரண விஷயத்தை சமயோசிதமாய் சரியான இடத்தில் சரியாக மாற்றும் திறன் பெரியவர்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக