திங்கள், 27 ஜூலை, 2015

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.

அட பக்கிங்களா .. டாலருக்கு மட்டும் இல்லடா.. உலகத்துல இருக்க எல்லா நாட்டோட கரன்சிக்கும் நிகரான இந்திய மதிப்பு வீழ்ந்துகிட்டு தான் இருக்கு...

அசிங்கப்படாலும் அமெரிக்கா காரன்கிட்டதான் அசிங்கப்படனுமாம்..

இது எப்படி தெரியுமா இருக்கு.... மச்சான்... நீ கேளேன்... மச்சான் மச்சான்.. நீ கேளேண்டா...



எங்கூர்ல 30-40 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொம்பள அரளி வெதைய அரைச்சு குடிச்சிடுச்சாம்... அந்த பொம்பளைய வாந்தி எடுக்க வைக்கணும்... இப்போன்னா சோப்பு கரைச்சு ஊத்துவாங்க... முட்டைய ஒடைச்சு ஊத்துவாங்க... அதுக்கப்புறம் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் அங்க பம்ப் வச்சு வாட்டர் வாஷ் பண்ணுவாங்க... ஆனா அந்த காலத்துல மனுஷனோட மலத்தை கரைச்சு ஊத்துவாங்களாம் . 

அத காலத்துல நெல்லு சோறு சாப்பிடறவங்க பெரிய பணக்காரங்க.. கிட்டத்தட்ட எல்லோர் வீட்லயுமே கேப்பை கூழ், களி தானாம்...(கேப்பை- கேழ்வரகு) அந்த பொம்பளைக்கு விஷத்த எடுக்க வாந்தி வரவைக்க அப்படி மலத்த கரைச்சு ஊத்துங்கன்னு பேசிகிட்டிருந்தாங்களாம் , அப்போ அந்த பொம்பளை .சொன்னுச்சாம். மணியார் பீய ஊத்துங்கன்னு...(அவர்தான் நெல்லு சோறு சாப்பிடுவாராம்) 

அந்த பொம்பளை கேட்டத விட கேவலமானது டாலருக்கு எதிரா மட்டும் தான் ரூபாய் மதிப்பு விழுந்துடிச்சுன்னு நம்ப வைக்க நினைக்கிறது... டாலருக்கு எதிரான்னு மட்டும் சொன்னா டாலர் மதிப்பு உயர்ந்ததா அர்த்தம்... அது அப்படியே தான் இருக்கு... இங்க ரூபாயோட மதிப்பு தேயுது...

அட மானம் கெட்ட பக்கிங்களா ... கரன்சி மதிப்ப உயர்த்த பொருளாதாரத்த பெருக்க ஒரு ம...... யும் புடுங்காம டாலருக்கு எதிரா விழுந்து போச்சுன்னு பெருமையா சொல்றீங்களே... த்தூ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக