வியாழன், 29 ஜூன், 2017

ஒரு கல்லு.. 36 மாங்கா

Image may contain: phone and indoor
எரநூத்தம்பது ரூவாய்க்கி ஆண்டிராய்டு போனு விக்கிறாங்கன்னதும் பல்ல இளிச்சுக்கிட்டு ஓடிப்போய் ஆறுலட்சம் பேரு ஒரே நேரத்துல முட்டி இருக்கானுங்க.....

அதெப்படி கட்டுபடியாவும்னு ஆப்பிளு, சாம்சங்கு உள்ளடங்கிய மொபைல் கம்பெனி கூட்டமைப்பு கொம்பு சுத்திக்கிட்டு திரியுறானுங்க...
எப்படி பாத்தாலும் இவனுங்க சொல்ற கணக்குப்படி ஒரு மொபைலுக்கு ரெண்டாயிரம் நட்டம் வருமாம்... சோழியன் குடுமி சும்மா ஆடாதே...


வழக்கம் போல சாமான்யன் தண்டவாளத்து ஓரமா குத்த வச்சு ஒக்காந்து காலைக்கடன கழிக்சு கிட்டே யோசிச்சு பார்த்தப்போ.....

ஆண்டிராய்டு போன வாங்கி வச்சுகிட்டு சும்மா இருப்பானா...?? ஏற்கெனவே பேசுப்புக்கு, டுவிட்டரு வாட்டுசாப்பு எல்லாம் இல்லன்னா சாதில தள்ளி வச்சிருவானுங்கன்னு பயந்து மொபைலு கடைக்கு போயி கேட்டதுக்கு, ஒரு ஆண்டிராய்டு போனு வாங்கணும்னா அஞ்சாயிரமாவும், பத்தாயிரமாவும்னு கடைக்காரன் பயமுறுத்தினதுல திரும்ப ஓடிவந்து நடுங்கிகிட்டே படுத்திருந்தவனெல்லாம் குபீர்னு ஓடிப்போய் எரநூத்தம்பது ரூவாய்க்கு மொபைல வாங்கிடுவான்.... அப்புறம் ஒரு நெட்டு கார்டு கொடுன்னு கடைக்கு ஓடுவான்....


சொரிஞ்ச கை சும்மா இருக்குமா... அப்படியே நெட்டு கார்டு நெட்டு கார்டுன்னு ஓடி ஓடி வாங்குவான்... இவன் வாங்க வாங்க காரணம் எதுவுமே சொல்லாம அவனுங்க நைசா காச புடுங்கிகிட்டே இருப்பான்..
ஒரு போனுல விட்ட ரெண்டாயிரம் ஓவாய... எப்படியும் ஒரு அம்பது ரீசார்ஜ் ல புடுங்கிடுவான்..... இந்த இடைப்பட்ட காலத்துல நெட்டு ஊஸ் பண்ணி ராயல் பேமிலியா வளந்துட்டோம்னு கற்பனைல மிதக்க ஆரம்பிச்ச ஏமாளிக் கூமுட்ட... எரநூத்தம்பது ரூவாய்க்கு வாங்கின போனு கெட்டுப்போச்சுன்னு வேற ஒரு போனு வாங்கியே ஆகணும்னு ஒத்தக்கால்ல நிப்பான்...

ஆக.... போனை வித்த மாதிரியும் ஆச்சு... டேட்டா கார்டு வித்து நட்டத்த சமாளிச்ச மாதிரியும் ஆச்சு.... அவனுங்கள திரும்பவும் போனு வாங்கியே ஆகணும்னு நினைக்கிற அளவுக்கு அடிமையாக்கின மாதிரியும் ஆச்சு...


ஆக.. ஒரே கல்லுல மூணு மாங்கா இல்ல... முப்பத்தாறு மாங்கா அடிச்சாச்சு...

இது கார்பொரேட் உலகம் டா.... பத்து ரூபாய தூக்கி வீசுறான்னா உன் பாக்கெட்டுல இருக்க நூறு ரூபாய குறி வச்சுதான் வீசுவான்... சும்மா தூக்கி வீச அவன் என்ன இளிச்சவாய் இந்தியனா????

நிச்சயம் இந்த ரிங்கிங் பெல் லுக்கு பின்னாடி இந்தியாவில் இருக்கும் வோடபோன், ஏர்டெல், ஐடியா, ரிலையன்ஸ் போன்ற கார்பொரேட் மொபைல் நிறுவனங்களும், மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் நிச்சயமாய் இருக்கும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக