வியாழன், 29 ஜூன், 2017

வதந்தியும் நலம் செய்யும்

எங்கள் ஊரில் எதிர்பாராத விதமாக ஒரு பெண் கிணற்றில் விழுந்து இறந்துவிட்டார்.... தென்னந்தோப்புகள் நிறைந்த பகுதியில் இருந்த பெரிய கிணறு அது...
No automatic alt text available.
இந்த காலகட்டத்தில் தென்னந்தோப்புகளில் நிறைய தேங்காய்கள் திருடு போய் கொண்டிருந்தது.. கீழே விழுவதையும் சொந்தமாக்கிக்கொல்வதையும் , சமயங்களில் மரத்திலிருந்து பறிப்பதையும் அந்த கள்வர்கள் வாடிக்கையாக்கி கொண்டிருந்தார்கள்... இதனால் தோப்பின் உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது... கூடவே வாழை தார்களும் களவாடப்பட்டது...



இந்த சமயத்தில் யாரோ ஒருவர் (பாதிக்கப்பட்ட தோப்பின் உரிமையாளர் ) கிணற்றில் விழுந்து இறந்த பெண் பேயாக நள்ளிரவில் அலைவதாகவும், மிக அகோர உருவத்துடன் இருப்பதாகவும் ஒரு வதந்தியை கிளப்பி விட்டனர்... அதுமட்டுமல்லாமல்... அதனை தொடர்ந்து திடீரென நோய்வாய்பட்டு இறந்த இரு மரணங்களை, அந்த சித்தரிக்கப்பட்ட பேயுடன் தொடர்பு படுத்தி வதந்தியை உறுதியாக பரப்பினர்...


இதன் மூலம் நாளடைவில் கள்வர்களின் நடமாட்டம் குறைந்து தேங்காய்கள் திருடு போவது குறைந்தது....

ஆக, ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்றால் சில வதந்திகள் தப்பில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக