உள்ளூரில் ஓடும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் உண்டு.. எல்லா நேரங்களிலும் அதே கட்டணம்தான்...
ஆனால்..சாதாரண நேரத்தில் ஒரு கட்டணமும் .... பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அதிகம் பயன்படுத்தும் "பீக் ஹவர்ஸ்" என்று சொல்லக்கூடிய நெரிசலான நேரத்தில் (காலை ஏழு முதல் ஒன்பதரை வரை) ஒரு கட்டணமும் இருந்தால் எப்படி இருக்கும்???
உதாரணமாக பத்து ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பயண தூரத்திற்கு இந்த பீக் ஹவர்ஸில் இருபத்தைந்து முதல் நாற்பது ரூபாய் கட்டணம் வசூலித்தால் எப்படி இருக்கும்???
உலகின் பல விமான நிறுவனங்கள் அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றன....
இவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை... பண்டிகை நாட்கள், வருட விடுமுறை
நாட்கள்.. கல்வி நிலையங்களின் விடுமுறை நாட்கள் என்று ஏதாவது வந்தால்
இவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.... இவர்கள் நிர்ணயிப்பதுதான் கட்டணம்
...
விமானத்தில் பயணிப்பவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் என்ற ஒரு
பொத்தாம்பொதுவான எண்ணம் மேலோங்கி இருப்பதால் இதை பற்றி யாருக்கும் கவலையோ
அக்கறையோ இல்லை...
ஆனால் உண்மை அதுவல்ல.... குறிப்பாக இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு
விமானத்தில் பயணிப்பவர்களில் சுமார் 70% பேர் கூலிகளே... அதிக கூலிக்காகவோ,
இந்தியாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தாலோ வெளிநாடுகளுக்கு
செல்பவர்கள், திரும்பி வருபவர்கள் தான் அதிகம்... இவர்களில் சுமார் 90%
பேர் முறையான வரியுடன் அந்நிய செலாவணியை ஈட்டித்தருபவர்கள்...
இவர்களின் நலனில் அக்கறை கொள்ளவேண்டியது அரசின் கடமை... இந்த விமான நிறுவனங்களின் தைரியமான கொள்ளையை ஏன் எந்த அரசும் கண்டுகொள்ள மறுக்கிறது???
# இப்படிக்கு... அந்த கூலிகளில் ஒருவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக