வியாழன், 29 ஜூன், 2017

குயுக்தி

ஒரு ஆங்கில திரைப்படம் பார்க்க நேர்ந்தது... அவிங்க என்ன பேசிக்கிறாய்ங்கன்னு புரியல.... ஆனா கத புரிஞ்சுது...

No automatic alt text available.
ஒரு நகரில் நடக்கும் பல கொலைகளை பற்றிய செய்திகளை ஒரு பத்திரிகை மட்டும் தொடர்ந்து முதலில் வெளியிடுகிறது... தொடர் கொலைகளால் அதிர்ந்து போன நகரம் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில் உறைந்து கிடக்கிறது.... கொலைகளை பற்றி முதலில் செய்தி வெளியிடும் பத்திரிக்கையின் விற்பனை மளமளவென உயர்கிறது...

கடைசியில் தொடர்கொலைகளுகான காரணத்தை காவல்துறை கண்டு பிடிக்கிறது.... அந்த பத்திரிக்கையின் முதலாளிதான் அந்த சீரியல் கில்லர்.... தன்னுடைய பத்திரிக்கையின் விற்பனையை உயர்த்துவதற்காக அந்த பத்திரிகை முதலாளியே தொடர்கொலைகளில் ஈடுபடுகிறார்... பிறகு அந்த கொலைகளை பற்றி செய்தி வெளியிட்டு தன பத்திரிக்கையின் விற்பனையை உயர்த்துகிறார்...

நிற்க...

தமிழக செய்தி ஊடகங்கள் மேற்கண்ட திரைப்படத்தை உண்மையாக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது..... சம்மந்தமே இல்லாதவர்களிடம் சம்மந்தமில்லாத கேள்விகளை கேட்டு, அவர்கள் எதையாவது சொல்லப்போக.... அதை ஊதி ஊதி.... ஈர பேனாக்கி.. பேன பெருமாளாக்கி... வில்லங்கத்தை கூட்டி டி ஆர் பி அளவை உயர்த்திக்கொள்ள பாடுபடுகிறார்கள்..


# வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் எந்த கட்சியை ஆதரிக்க போகிறீர்கள்.. # நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக