வியாழன், 29 ஜூன், 2017

ஒரு மழை காலத்தில்

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.. ஆனால், பள்ளிக்கூடம் திறக்க வேண்டி இருப்பதால் கல்வி அதிகாரிகள் அவர்களை வெளியேற சொல்லி வற்புறுத்துகிறார்கள்...
Image may contain: 1 person, smiling

அரசு நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் ஏற்படும் குளறுபடிகளே இந்த பிரச்சினைக்கு காரணம்... பள்ளிக்கூடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி இருக்கும் போது, மாணவர்கள் எப்படி கல்வி கற்க இயலும்? உடனடியாக அங்கே தங்கவைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.. அதுவரை மாணவர்களுக்கு விடுப்பு கொடுக்க வேண்டும்....



தொடர்ந்த விடுமுறையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்... அதே நேரம் எல்லாவற்றையும் இழந்து அங்கே தஞ்சம் புகுந்திருப்பவர்களை துரத்தினால்.. அவர்கள் எங்கே செல்வார்கள்...?? இந்த சூழ்நிலையை வேகமாகவும்-திறமையாகவும் கையாண்டு தீர்வு காணவேண்டியது அரசு நிர்வாகத்தின் தலையாய கடமை...


அதே நேரம்... அரசு எங்கள் வீடுகளை சுத்தமாக்கி தர வேண்டும்... உடனடியாக மாற்று இடம் கொடுத்து எங்களை குடியேற்ற வேண்டும் என்று டி வி காரர்கள் மைக்கை நீட்டியதும் திமிர் காட்டுவதெல்லாம் கொழுப்பின் உச்சம்... அரசு கோழிமுட்டை அம்மிகல்லையும் உடைக்கும்....


ஆமா.. இந்த போட்டோவுக்கும் செய்திக்கும் என்ன சம்மந்தம்...?? நல்லா பாருங்க... இந்தம்மா மழைல நனைஞ்சு இருக்கு தானே.. ஈரத்தலையோட இருக்கு..... போட்டோ போட்டா ரசிச்சுட்டு போவாம ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பீங்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக