வியாழன், 29 ஜூன், 2017

எஸ் எஸ் சிவசங்கர்

"தம்பி... அண்ணன் கூட நிக்கிறேன்.. ஒரு போட்டோ எடுடா... வரலாறு ரொம்ப முக்கியம்.." நான் தம்பி மனோஜிடம் சொல்ல.... அண்ணன் சிரித்தபடி பக்கத்தில் நின்று போஸ் கொடுத்தார்... போட்டோ எடுக்க ஆயத்தமான வேளையில்.." நம்ம கலருக்கு இங்க வெளிச்சம் பத்தாது.... வாங்க.. மேடைக்கு போய்டுவோம்... அங்கதான் நிறைய லைட் போட்டிருக்காங்க.." என்று குபீரென உண்மையை உடைத்தார் அண்ணன்...
Image may contain: 2 people

எப்போதுமே உண்மையை நகைச்சுவையாக சொல்லும் ஆற்றல் பெற்ற அண்ணன் எஸ் எஸ் சிவசங்கர் அவர்களுடனான ஒரு அற்புத சந்திப்பு அது....


"மக்களோடு நான்" என்ற தலைப்பில் சிவா அண்ணன் அவர்களின் முகநூல் பதிவுகளை தொகுத்து கிழக்கு பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்ட வரலாறை கத்தாரில் வெளியிடும் ஒரு சரித்திர சம்பவத்தின் பார்வையாளனாய் கலந்துகொள்ள அழைத்த அண்ணன் சதக்கத்துல்லா மற்றும் பாலாஜி அவர்கள், சற்றும் எதிர்பாராத நேரத்தில் "கட்சி கடந்து அண்ணனின் எழுத்தை நேசிக்கும் செந்தில் அவர்களுக்கு அண்ணனின் பொற்கரங்களால் இந்த புத்தகத்தை வழங்குவார்கள்.."என்று அறிவிக்க.... என்னுள் உடனடியாய் உருவான அதிர்ச்சி நெடு நெடுவென்று ஒரு சந்தோஷ சுனாமியாய் என்னுள் ஏற்படுத்திய அலைகள் அடங்க வெகுநேரமாகியது என்பதை நான் சொல்லித்தான் ஆகவேண்டும்...

அண்ணன் அவர்களுடன் விழாவில் கலந்துகொண்ட புதுக்கோட்டை அண்ணன் மரியாதைக்குரிய பெரியண்ணன் அரசு அவர்களுடன் கலந்துரையாடியது மட்டற்ற மகிழ்ச்சி...

விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் மதிய உணவளித்து உபசரித்த அண்ணன் சதக்கத்துல்லா மற்றும் நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...


இரண்டொருநாள் சிவா அண்ணனின் பயணப்பாதையில் இணைந்து விட எவ்வளவோ முயற்சித்தும் அலுவலகப்பணிகள் பின்னோக்கி இழுத்ததால் இறுதி வரை இணையமுடியாமல் போனது வருத்தம்... விமான நிலையத்தில் இருந்த அண்ணனுடன் தொலைபேசி வழியே மன்னிப்பு கோரியபோது...."பொழைக்கத்தான இங்க வந்திருக்கோம்.. அதுதான் முக்கியம்... கவலைப்படாம வேலைய கவனிங்க.." என்று எங்களின் இயல்பு நிலையை புரிந்துகொண்ட பெருந்தன்மையாய் சொன்னபோது.... நெஞ்சு நன்றியால் விம்மியது.... 

உங்கள் புரிதலும், அன்பும், அரவணைப்பும் உங்களை உயர்த்திக்கொண்டிருக்கும் தானியங்கி படிக்கட்டுக்கள் அண்ணா..... நன்றி....!!!

(இரண்டு கருப்பு சிங்கங்களை தன் காமிராவில் பதிவு செய்தவர் நண்பர் திரு அண்ணாதுரை ராமச்சந்திரன் அவர்கள்)

கடைசி குறிப்பு: "சட்டில இருக்கிறது தானே அகப்பைல வரும்..." என்று எங்கள் கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.... எவ்வளவு லைட்டு இருக்க இடமா தேடி போயும் கூட ரெண்டு பேரு மூஞ்சியும் கருப்பாத்தாண்ணே தெரியுது.

அண்ணாதுரை கேமரா சரி இல்ல போல.... அடுத்த முறை வாங்க.... எங்கயாச்சும் ஸ்டேடியம் பக்கமா போய் போட்டோ புடிப்போம்.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக