பெரும்பாலான
நகர தெருக்களில் மளிகை -காய்கறிகள் முதல் டியூப் லைட்,
குழந்தைகளுக்கான தின்பண்டங்கள், விளையாட்டு பொருட்கள் போன்ற
அத்தியாவசிய/அன்றாட உபயோக பொருட்களை விற்கும் கடைகள் இருக்கும்...
விற்பனையாளர் உள்ளிருப்பதே தெரியாத அளவு சாஷே எனப்படும் பாக்கெட்டுகள்
தொங்கிகொண்டிருக்கும்...
இதுபோன்ற கடைகளுக்கான வாடிக்கையாளர்கள் அந்த தெருவில் குடியிருப்பவர்கல்தான்.. இந்த கடைகளை பெரும்பாலும் நாட்டார்கள்
நடத்துவார்கள்... அந்த தெருவில் குடியிருக்கும் பெண்கள் சாவகாசமாய் அந்த
கடைகளுக்கு வந்து "நாட்டாரே... அரைகிலோ துவரம்பருப்பு... ஒருகிலோ
வெங்காயம்.. ஒரு சோப்பு... சீக்கிரம் கொடு நாட்டாரே.... சோறு அடுப்புல
இருக்கு..." என்பதுபோன்று பொருட்களை வாங்கிக்கொண்டு செல்வார்கள்...
இதுபோன்ற
கடைகளுக்கு எப்போதாவது வெளிப்பகுதியில் இருந்து வரும் இளைஞர் ஒருவர்
சிகரெட் வாங்கவோ, கூல் டிரிங் வாங்கவோ சென்றால்... எத்தனை பெண்கள்
அதற்கு முன்பாக வந்து காத்து நின்றாலும்.... புதிதாய் வந்த அறிமுகமில்லாத
இளைஞருக்கு தேவையானதை கொடுத்தனுப்புவார் கடைக்கார நாட்டார்...
இவ்வளவு
பேர் காத்துக்கொண்டு நிற்கும்போது அப்போதுதான் வந்த இளைஞருக்கு
தேவையானதை ஏன் முதலில் கொடுத்து அனுப்புகிறார் என்று விசாரித்தால்....
அந்த கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் நடுத்தர வயது குடும்ப
பெண்களாகவே இருப்பார்கள்... புதிதாக வரும் இளைஞரை காக்க வைத்தால் அவரது
கண்கள் அந்த பெண்களின் மீது விளையாடும்.... அதற்கான சந்தர்பத்தை
ஏற்படுத்தி தராமல் அந்த இளைஞருக்கு தேவையானதை கொடுத்து உடனே நகர்த்தி
விடும் தந்திரம் அது....
பெண்களின்
பாதுகாப்பில் அவரவர் பங்கை ஆற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்....
ஆனால் பெண்கள்தான் தங்கள் பாதுகாப்பை தகர்த்துக்கொள்கிறார்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக