புதன், 28 ஜூன், 2017

இது கலாம் காலம்...!!!


Image may contain: 1 person
அக்கினி சிறகுகளில் அங்கலாய்த்தவனே...
இதோ... உன் அறிவுக்கொடி உறவுகள்
அறுபத்தந்துகோடி தொடர்கிறதே...

ஒரு திட்டத்தின் வெற்றிப்பரிசாய்
என்னவேண்டுமானாலும் கேள் என்று
அமைச்சர் கேட்டபோது...
என் வளாகத்தில் நட ஒருலட்சம் மரக்கன்று கொடுங்கள்...
என்றாயாமே.....
உன் அந்த ஒருலட்சம் குழந்தைகளும்
காற்றோடு கலவி கொண்டு
பல நூறு தலைமுறைகளை பிரசவிக்கும்
அந்த மூச்சுக்கொடி உறவை தொடருமே...

பால்வெளியையும் .....மாற்றுத்திறனாளிகளின்
கால் வலியையும்
கட்டுக்குள் வைத்தவனே....

நீ காலமானாய் என்பதே சரி...
ஆம்...சோழர் காலம்.. பல்லவர் காலம்...
ஆங்கிலேயர் காலம் என்பது போல...
இது கலாம் காலம்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக