ஒரு விவசாயியை இந்த சமூகம் கோழையாகவும், கையேந்துபவனாகவும் சித்தரிக்க முயல்வதை வன்மையாய் கண்டிக்கிறேன்...
விவசாயி.. போராளியின் வடிவம்.... கலப்பையும் மண்வெட்டியும் இவன் ஆயுதங்கள்... உயிர் வதை செய்பவனை போராளி என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்பதே புதிரான விஷயம்... விவசாயி இயற்கையோடு போராடுபவன்... அரவணைத்து செல்லவும்- எதிர்க்க்கவுமாய் எதற்கும் தயாராக இருப்பவன்...
அவன் கோழை அல்ல... நீர், நிலம், காற்று, ஆகாயம், அக்கினி என பஞ்ச பூதங்களையும் எதிர்க்கும் மனோதிடமும், அரவணைத்து வேலைவாங்கும் பக்குவமும் ஒருசேரப்பெற்றவன் .... அவனது ஆயுதம் எதிரியான "இயற்கையை" கூட அழிக்க நினைகாதவை...
யாராலும் அசைக்க முடியாத இயற்கையை எதிர்க்க துணிந்தவன் நவீன விஞ்ஞானத்திற்கும், அச்சடித்த காகிதத்திற்குமா பயந்து தற்கொலை செய்வான்...??
மூடர்களே... தற்கொலை செய்தவன் எல்லாம் எதிரிக்கு பயந்து அல்ல... அவன் ரத்தத்தை உறிஞ்சி கொழுத்து துரோகிகளாய் முதுகில் குத்திய உங்களால் தான்... இது தற்கொலை அல்ல... துரோகிகள் நீங்கள் செய்த கொலை...
ஆனால்.. அந்த துரோகத்தின் உறுத்தல் கூட இல்லாமல் உங்களால் எப்படியடா கேவலமான பதவி ஆசைக்காக "தற்கொலை" செய்து கொள்கிறான் விவசாயி என்று கூசாமல் பொய் சொல்ல முடிகிறது...
அட அற்ப அரசியல் பதர்களே... விலங்குகளையே நேசிப்பவர்கள் நாங்கள்... உங்களை மட்டும் வெறுக்கவா செய்வோம்.... உங்கள் துரோகத்தின் தன்மை உணர்ந்து எங்கள் காலில் வீழும் நாள் வரும்...
அன்று உங்களுக்கு உணவளிக்க விதை நெல் வைத்திருக்கிறோம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக