எங்களூரின்
சமகால இளைஞர்கள் இந்த பூமிப்பந்தின் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள், மத்திய
கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய பிராந்தியங்கள், அமெரிக்க மாகாணங்கள்...
ஏன்.. இன்னும் சொல்லப்போனால் அரபிக்கடல், வங்காள விரிகுடா- இந்திய
பெருங்கடல் என நிலம்-கடல் சார்ந்த பிரதேசங்களில் பல் வேறு விதமான உயர்
பதவிகளில் கோலோச்சி கொண்டிருந்தாலும், கடந்த இருபது வருடங்களுக்கு முன்னால்
அப்படி இல்லை...
எங்கள் பகுதிக்கும், உலகின் மற்ற நாடுகளுக்குமான தொடர்பு சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலானது... பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பாக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் எத்தனை கல்வி அறிவுடன் இருந்தாலும், சரியான தேடலோ- வழிகாட்டுதலோ இல்லாததால் ஏஜெண்டுகள் மூலமாக ஒன்று முதல் ஐந்து லட்சங்கள் வரை கட்டணம் செலுத்தி கூலி வேலைக்கு தான் சென்றிருகிறார்கள். இதில் பெரும்பாலும் கடன் வாங்கி ஏஜென்டிடம் கொடுத்தவர்களே அதிகம்..
அந்த
ஏஜெண்டுகள் இங்கே கொடுக்கும் வாக்குறுதி வேறு.. அங்கே நிகழ்வில்
கொடுக்கப்படும் வேலை வேறு... என்றாலும், கடன் வாங்கி விட்டு வந்துவிட்டதால்
வேறு வழி இல்லாமல் தொடர்ந்து உழைத்தவர்களே அதிகம்..
அப்படி வேலைக்கு போனவர்களில் சிங்கபூர் நாட்டில், கேபிள் புதைக்கும் வேலைக்கு சென்ற இருவரை பற்றியதே இந்த பதிவு. சம்மந்தப்பட்டவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக அவர்களை X மற்றும் Y என்று அடையாளம் கொள்வோமாக...
திருவாளர் X கடின உழைப்பாளி... ஊரில் இருக்கும்போதே விவாசாயம் தொடர்பான வேலைகளை அதிகம் செய்து பழக்கப்பட்டவர்.. திருவாளர் Y கூட உழைப்பாளர் என்றாலும், சற்றே நையாண்டிகாரர்... சில நேரங்களில் உழைப்பதுபோல பாவனை காட்டும் கில்லாடி...
ஒருநாள்
அவர்கள் மற்ற நிறைய தொழிலாளர்களுடன் அவர்கள் இருவரும் கேபிள் பள்ளம்
வெட்டும் வேலையில் இருந்தபோது, மேற்பார்வையாளர் வருகை தர, திருவாளர் X ,
அந்த மேற்பார்வையாளரிடம் நற்பெயர் வாங்க வேண்டி... மண்வெட்டியை ஓங்கி ஓங்கி
வெட்டி நிறைய மண்ணை அள்ளி வெளியே வீசி இருக்கிறார்..
ண்ணை
அள்ளி வெளியே வீசி இருக்கிறார்.. மேற்பார்வையாளர்..”குட்... குட்...”
என்று சொல்லி அவருக்கு அங்கீகாரம் கொடுக்க, உடன் வேலை செய்த மற்றவர்களுக்கு
திருவாளர் X மேல் சற்று வெறுப்பு ஏற்பட்ட நிலையில் , நமது ஊரை சேர்ந்த
திருவாளர் Y அவர்களோ.... “ மொண்டட்டிய ஓழி மவனே... இவனுக்கு ஒரு சாவு
வரைலையே....” என்று மனசுக்குள் சொல்லியபடியே மண்வெட்டியை ஓங்கி வெட்ட
முயற்சி செய்திருக்கிறார்... ஆனாலும் திருவாளர் X அளவிற்கு வெட்ட
முடியவில்லை.... (மனதிற்குள் சொல்லியதாய் நினைத்துக்கொண்டாலும்
அவரையுமறியாமல் மற்றவர்களுக்கும் கேட்கும்படி அது சத்தமாய் வந்துவிட்டது...
)
திருவாளர் Y அவர்கள் பின்னாளில் ஊருக்கு வந்திருந்த பொழுது இந்த சம்பவத்தை நினைவு கூற, அன்று முதல் இதுபற்றி நினைக்கும் போதெல்லாம் என்னையறியாமல் சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை...
சரி... இந்த சம்பவத்திற்கும் இந்த புகைப்படத்திற்கும் என்ன சம்மந்தம்...??
திருவாளர்
X இடத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை நினைத்துக்கொண்டு...
திருவாளர் Y இடத்தில் மற்ற அமைச்சர்களை நினைத்துக்கொண்டால்... மற்ற
அமைச்சர்களின் மைன்ட் வாய்ஸ் எப்படி இருக்கும்..
முதல்வரின் காலில் நெடுஞ்சான்கிடையாக திரு ஒ பி அவர்கள் விழுந்து கிடக்க...
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் : - “ங்கொய்யால... இவன் குட்டுச்சாரா போவ... இப்படி விழுவுறானய்யா.. நாம விழுவாம இருந்தா இந்த அம்மா பதவிய புடுங்கிடும்...” என்றபடி போதெரென காலில் விழுகிறார்..
அமைச்சர் வளர்மதி : - “அட சண்டாளன்களா... ஆம்பளைங்க இவனுங்களே இப்படி தொபுக்கடீர்னு விழுந்துட்டானுன்களே... நாம விழுவலன்னா இந்த நிமிஷமே பீஸ புடுங்கிடுமே...” என்றபடி விழுந்துவிட்டு.... “ இவனுங்க பொசுக்குன்னு எழுந்துட்டாய்ங்க.... எம்பாடுல்ல சந்தீல போகுது...” என்றபடி கைகளை ஊன்றி பக்கத்திலிருந்தவரை பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி எழுகிறார்..
இவரை தொடர்ந்து மற்ற அமைச்சர் பெருமக்களும் திடீர்.. தொபுக்கடீர்... பொதேர்... மடேர்.. என ஆளாளுக்கு சத்தத்தோடு விழுந்து தங்கள் பதவியை தக்கவைத்துக்கொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக