தூர்தர்ஷன்
தொலைக்காட்சியில் "வயலும்-வாழ்வும்" என்றொரு விவசாயிகள் தொடர்பான
நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்... ஆனால் அதை விவசாயிகளே கூட பார்ப்பதில்லை...
ஆனால் வெள்ளிக்கிழமைகளில்
ஒளிபரப்பாகும் "ஒளியும்-ஒலியும்" நிகழ்ச்சியை காண கூட்டம் அலைமோதும்..
(யாரோ சிலர் வீட்டில் தான் தொலைக்காட்சி பெட்டி இருக்கும் காலம் அது )
புதன்கிழமைகளில் ஒளிபரப்பாகும் "சித்ரகார்"என்ற நிகழ்ச்சியில்
ஒளிபரப்பாகும் புரியாத மொழி திரைப்பாடல்களை கூட கண்கொட்டாமல் பார்த்தவர்களும் உண்டு...
அந்த நேரத்தில் எனக்கொரு யோசனை தோன்றியது... இந்த வயலும் வாழ்வும்
நிகழ்ச்சியின் நடுவில் வயல்வெளி சார்ந்த சினிமா பாடல்களையும் ஒளிபரப்பி
இருந்தால் எல்லோரையும் அந்த நிகழ்ச்சியை பார்க்க வைத்திருக்க
முடியும்... என்று தோன்றியது...
வெக்கமா தான் இருக்கு.... ஆனா வேற வழி இல்லையே.... ஆடுற மாட்ட
ஆடிக்கறக்கணும்.. பாடுற மாட்ட பாடிக்கறக்கனும்னு சொலவடை சொன்னா
மட்டும் பத்தாது.... நடைமுறைப்படுத்தவும் கத்துக்கணும்....
கூட்டம் கூடினாத்தான் அரசின் கவனத்தை கவரமுடியும் என்றால்... கூட்டத்தை கவர இப்படி ஏதாவது செஞ்சுதான் ஆகணும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக