வியாழன், 29 ஜூன், 2017

ரிட்டயர்டுக்கு பின் யோக்கியனாகிறவர்கள்

Image may contain: one or more people, screen and phone

நீதித்துறை, அணுசக்தித்துறை, உளவுத்துறை,சி பி ஐ , ஐ பி போன்ற அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள் , தன்னுடைய ஓய்விற்கு பிறகு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றும், சுயசரிதை என்ற பெயரில் புத்தகங்களை வெளியிட்டும் அவர்கள் பணியாற்றிய காலத்தில் நடந்த முக்கியமான சம்பவங்களை (ரகசியங்களை) வெளியிட்டு சர்ச்சையை கிளப்புவது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது 


அரசு பதவிகளில் அமரவைக்கப்ப்படும்போதே நாட்டின் ரகசியங்களை அம்பலப்படுத்தமாட்டேன் என்ற உறுதி மொழி கொடுத்த பின்புதான் அவர்கள் முக்கிய பதவிகளில் அமரவைக்கப்படுவதாக மட்டுமே நான் நம்பிக்கொண்டிருந்தேன்... பிரதமர்-முதலமைச்சர்-அமைச்சர்கள் பதவி ஏற்கும் வைபவத்தில் பதவிப்பிரமாணமும்-ரகசியக்காப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்டார் என்ற செய்திகளை கேட்கும்போதும் படிக்கும் போதும் "ரகசிய காப்பு பிரமாணம்" என்ற வார்த்தைகான அர்த்தம் எனக்கு சிறு வயதில் புரியவில்லை.... ரகசியங்களை காப்பதாக எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிதான் அது என பின்னாளில் புரிந்தது...

அமைச்சர்களாக இருந்தவர்கள் தங்கள் துறைகளின் ரகசியங்களை , தன்னுடைய பதவி பறிபோய் விட்டாலோ, அல்லது வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு வெளியிட்டுவிட்டால் நாட்டின் பாதுகாப்பு என்னாகும்?? அமைச்சர்கள் எடுக்க கூடிய ரகசியக்காப்பு பிரமாணங்கள் இதுவரை காக்கப்படுகிறது என்பதே உண்மை... ஆனால் மேலே கூறிய அரசு பொறுப்புகளில் இருப்பவர்கள் அத்தனை காலமும் அந்த பதவி கொடுத்த எல்லா சுகங்களையும் அனுபவித்துவிட்டு, ஓய்வை பெற்று அதற்கான பென்ஷன் கூலியையும் அனுபவித்துக்கொண்டே ஊடகங்கள் அழைக்கின்றன என்பதற்காகவோவர்கள், கவரில் இட்டு கொடுக்கும் ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டோ--கல்யாண வீடியோ கேமராவில் தன்னுடைய பிம்பம் பதிந்து நம்மையும் டி வி திரையில் பார்க்க மாட்டோமா என ஏங்கும் அல்ப விளம்பர ஆசையுடையவர்களை போன்ற ஆசையாலோ.... நாட்டின் ரகசியங்களை அம்பலப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்

அதை விட பெரிய கொடுமை... தாம் நேர்மையாக செயல்பட நினைத்த போது, மேலதிகாரிகளின்-அரசியல்வாதிகளின் தலையீட்டால் நேர்மைக்கு புறம்பான காரியங்களை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் "திடீர்" அரிச்சந்திரன் ஆகி விடுகிறார்கள்.... அவர்களை கேட்க ஒரு சாமான்யனான எனக்கு சில கேள்விகள் இருக்கிறது.... "ஏனுங்க சார்.... யாரு கட்டாயப்படுத்தினாலும் என்னால அப்படி செய்ய முடியாதுன்னு வேலைய விட்டு வந்திருக்கலாமே சார்... அன்னிக்கு சலுகை, சம்பளம் எல்லா ரோமத்துக்கும் ஆசை பட்டுதான செஞ்சீங்க..... இன்னிக்கு என்ன யோக்கிய வேஷம் போடறீங்க...... ".

என்னை பொறுத்தவரை......... இருக்கும் வரை எல்லா கேவலமான காரியங்களிலும் ஈடுபட்டுவிட்டு, வயதாகி ரிட்டயர்டு ஆன பிறகு தாம் பணிபுரிந்த துறைகளை பற்றி எங்கும் பேசுவதற்கு இவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்... இவர்கள் தொடர்ந்து கண்கானிக்கப்படவும் வேண்டும்...

வெற்று விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு ஊடகங்களில் கேமெரா முன்னால் எலாவற்றையும் போட்டு உடைக்கும் இவர்கள் நாளை ஏதோ ஒரு அன்னிய சக்தி பண ஆசை காட்டினால் நாட்டின் ரகசியங்களை பேரம் பேசி விற்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்???

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக