இளம்
வயதில் வீட்டில் யார் மீதாவது அடிக்கடி கோபம் வரும்... செலவுக்கு பணம்
கொடுக்கவில்லை- துணி துவைத்து வைக்கவில்லை இப்படி ஏதாவது அல்ப
காரணங்களுக்காக...
அப்படி கோபம் வரும்போதெல்லாம் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது வழக்கம்... அப்பவோ-அம்மாவோ-அக்காவோ கெஞ்சி, மல்லுக்கட்டி, வற்புறுத்தி சாப்பிட வைப்பார்கள்.... அவர்கள் வற்புறுத்த வற்புறுத்த கோபத்தின் வேகம் கூடும்.....
அப்படி கோபம் வரும்போதெல்லாம் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது வழக்கம்... அப்பவோ-அம்மாவோ-அக்காவோ கெஞ்சி, மல்லுக்கட்டி, வற்புறுத்தி சாப்பிட வைப்பார்கள்.... அவர்கள் வற்புறுத்த வற்புறுத்த கோபத்தின் வேகம் கூடும்.....
கொஞ்சம் வளர வளர இந்த கோபத்திற்கான எதிர்வினை குறைய தொடங்கியது... அதாவது இப்போதெல்லாம் அவர்கள் யாரும் மல்லுக்கட்டுவதோ- வற்புறுத்துவதோ இல்லை....."பசிச்சா கழுத வந்து கொட்டிக்கும்...." . என்பது போன்ற அலட்சியம் தெரிந்தது....
உண்ணாவிரதம் இருக்கும் போது சாப்பிட கூட வற்புறுத்தாதவர்கள்.. நம்முடைய கோரிக்கைகளை எங்கே பரிசீலிக்கப்போகிறார்கள்... ?? என்ற கேள்வி என்னுள் பூதாகரமாய் பொங்கி எழ.....
என்னுடைய போராட்ட முறையை மாற்றி திட்டமிட்டேன்..... எதிரிகளை
பழிவாங்கியே தீர வேண்டும்.... என்ற எண்ணத்தை என்னுள் விதைத்து, அதற்கான
சரியான நாளுக்காக காத்திருந்தேன்... அந்த நாளும் வந்தது.....
அன்று வாளை மீன் வறுவல் செய்து குழம்பு வைத்திருந்தார்கள்.... ஒரு
துண்டு கூட விடாமல் மொத்தமாய் தின்று விட்டு, வெறும் குழம்பை மட்டும்
விட்டு விட்டு "வெற்றிவேல்... வீர வேல்." என்று முழங்கிய படி சென்று
விட்டேன்....
இந்த போராட்ட முறை ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.. என்பதை மறுக்கவோ- மறக்கவோ முடியாது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக