புதன், 28 ஜூன், 2017

ஒரு சடங்கு - "சவரம் செய்தல்"

தமிழ் இந்து திருமணச்சடங்குகளில் ஒரு சடங்கு "சவரம் செய்தல்"
Image may contain: 1 person

திருமணத்திற்கு முன்பு நாவிதர் மணமகனுக்கு சவரம் செய்வார்... முகம் மட்டுமில்லாமல் ஆண்குறி பகுதியிலும் சவரம் செய்வார்... அப்படி சவரம் செய்யும் போது நகைச்சுவையாகவும், காமம் கலந்த பேச்சுக்களுமாய் இருக்கும்... அப்போது அந்த மணமகன் இல்லற வாழ்க்கைக்கு தகுதியுடையவன் என்றால் அவனது ஆண்குறி விரைப்படையும்... 


அந்த நாவிதர் வந்து மணப்பெண்ணின் தந்தையிடமோ, முக்கியமான உறவினரிடமோ "மணமகன் இல்லற வாழ்க்கைக்கு தகுதியானவன்தான்" என்று சொல்வார்...

அப்படி அவர் தகுதிச்சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே திருமணம் நடக்கும்... இல்லை என்றால் திருமணம் நடைபெறாது...

(அப்போதிருந்த நாவிதர்கள் நேர்மையாகவும், ஒரு பெண்ணின் வாழ்க்கை திருப்தியற்றதாய் போய் விட கூடாது என்ற நல்லெண்ணம் உடையவராகவும், கையூட்டிற்கு ஆசைப்படாதவராகவும் இருந்திருப்பார்கள்)

என் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக