வியாழன், 29 ஜூன், 2017

எதை சொல்வது-எப்படி சொல்வது

No automatic alt text available.

ஒரு மன்னனுக்கு தன்னுடைய ஜாதக பலனை பார்க்கும் எண்ணம் வந்தது... அரண்மனை ஜோதிடரிடம் தன்னுடைய ஜாதக பலனை கணித்து சொல்லும்படி கேட்டான்.. அவனுடைய ஜாதகத்தை பரிசீலித்த ஜோதிடர் அதிர்ச்சி அடைந்தார்... உடனே அவரது முகம் மாறியது... “என்ன ஆச்சு” என்று மன்னன் கேட்க, “மன்னா.. அதை எப்படி நான் சொல்வேன்.. உங்கள் ஆயுள்காலம் முடிவடையும் நேரம் வந்துவிட்டது... கூடிய விரைவிலேயே நீங்கள் மரணமடைய நேரும்..” என்று சொன்னார்..

கோபமடைந்த மன்னன் அந்த ஜோதிடரை உடனே சிரச்சேதம் செய்ய சொல்லி ஆணையிட்டான்.. இருந்தாலும் மன்னருக்கு மனம் அமைதி அடையாமல் வேறொரு ஜோதிடரை அழைத்து வர சொன்னார்... தலைமை மந்திரியான செந்தில் கே நடேசன், தனக்கு தெரிந்த ஜோதிடரான @பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன் அவர்களை மன்னனிடம் அழைத்து சென்றார் ( சும்மா அவரையும் கோர்த்து விடுவோமே)

மன்னரின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர், மன்னரின் ஆயுள் காலம் முடிவடைய போவதை அறிந்தார்.. ஆனாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், “மன்னா... உங்களது கடந்த காலமும், நடப்பு காலமும் மிகவும் அற்புதமாக இருக்கிறது.. எதிர்காலமும் பெரும் பேரோடும்-புகழோடும் இருக்கும்... உங்களுக்கு பிறகும் கூட உங்கள் மகன் உங்களின் நல்லாட்சியை தொடர்வார்” என்று சொன்னார்... மகிழ்ந்த மன்னன் ஜோதிடருக்கு போன் முடிப்புகளை வழங்கி அனுப்பி வைத்தான்... சில காலத்தில் ஜோதிடர்கள் சொன்னது போலவே மன்னன் மரணமடைந்தான்.. இளவரசன் ஆட்சிக்கு வந்து மன்னனின் புகழுக்கு கலங்கமில்லாமல் ஆட்சியை தொடர்ந்தான்...

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது... எதை சொல்வது என்பது வேறு... அதை எப்படி சொல்வது என்பது வேறு.... சொல்லும் விஷயம் உண்மையானதாக இருந்தாலும் கூட அருவெறுக்க தக்க வகையிலோ-கோபமூட்டத்தக்க வகையிலோ இருந்தால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்...
இது எனக்கும் பொருந்தும்.. சம்மந்தப்பட்ட ......................ம் பொருந்தும்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக