"முதல்வன் படத்துல ரகுவரன் அர்ஜுன் கிட்ட கேப்பாரு....
"என்னை சமாளிக்கவே முடியலல்ல...."
"என்னை சமாளிக்கவே முடியலல்ல...."
அதாவது
ஆட்சியை இழந்த ரகுவரன் , தன்னை தோற்கடித்துவிட்டு ஆட்சிக்கு வந்த
அர்ஜுனுக்கு பல்வேறு இடைஞ்சல்களை கொடுத்து கொண்டே இருப்பார்.... அது
திரைப்படம் என்றாலும் , பதவி இழந்த அரசியல்வாதி , அடுத்து ஆட்சிக்கு
வருபவன் நல்லவிதமாக ஆட்சி நடத்தி விட கூடாது என்பதிலும், அப்படி நடத்தினால்
தன்னுடைய ஆட்சி காலத்தை மக்கள் குறை
கூறி விடுவார்கள் என்பதற்காகவும், தொடர்ந்த பிரச்சனைகளை உருவாக்கி...
"பார்த்தீர்களா.. மறுபடியும் எனக்கே வாய்ப்பு கொடுங்கள்.. நான் நல்லவிதமாக
ஆட்சி செய்கிறேன்" என்று காட்டுவதற்காகவும் அப்படி இடைஞ்சல்களை கொடுக்கும்
உண்மை நிலையை விளக்குவதாக அந்த காட்சி இருக்கும்...
ஸ்டாலினோ- அன்புமணியோ.. அல்லக்கைகளோ ஆட்சியாளர்களுக்கு தன்னுடைய சேனல்கள் வாயிலாகவும், இயல்பாக நடக்கும் பிரச்சினைகளை பெரிதாக்கியும் நாடகம் ஆடுவார்கள்... அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படக்கூடிய எல்லா காரியங்களையும் செய்வார்கள்.
ஆனால்... பொதுமக்களும் அரசுக்கு சவால் விடுவதையே வாடிக்கையாக்கி கொண்டிருப்பதுதான் வேதனை...
நான் சாலை விதிகளை மதிக்க மாட்டேன்... கட்டிட விதிகளை பின்பற்ற மாட்டேன்.. சாலைகளில் தான் குப்பைகளை கொட்டுவேன்... இப்படியான இடைஞ்சல்கள்...
அட
கூமுட்டைங்களா.... அரசியல்வாதிங்க அரசுக்கு இடைஞ்சல் பண்ணா அடுத்த ஆட்சி
அவங்களுக்கு கிடைக்கும்னு ஒரு காரணம் இருக்கு.. நீங்க அரசுக்கு இடைஞ்சல்
பண்ணினா... உங்களுக்கு தான் உயிர் போகும்... சீக்கு வந்து சாவீங்க....
என்னத்த சொல்லி என்னத்த பண்ண...
எந்த கட்சி அரசாக இருப்பினும் அரசுடன் ஒத்துழைக்கும் மக்களை கொண்ட நாடு மட்டுமே உருப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக