வியாழன், 29 ஜூன், 2017

அந்தரங்கம்




Image may contain: one or more people and people sitting

தனி மனித சுதந்திரத்தை குடும்ப வாழ்க்கையில் குழப்பிக்கொண்டு, சம்பாதிக்கிற/இளமை திமிரில் உற்றார்-உறவினர்-சுற்றம்-நட்பு... இதெற்கெல்லாம் முன்பாக குழந்தைகளின் எதிர்காலம் என எதை பற்றியும் கவலை படாமல் விவாகரத்து பெட்றோ-பெறாமலோ பிரிந்து செல்லும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் பழிவாங்க சிலபல ரகசியங்களை அம்பலப்படுத்துவார்கள்...

அதிலும் ஆணின் அம்மணம் அவமானமில்லை என்ற பாழாய்போன சமூக சீரழிவின் வெறியாட்டமாய் சம்மந்தப்பட்ட பெண்ணுடன் வாழும்போது அவர்கள் எடுத்துக்கொண்ட அந்தரங்க நிர்வாண புகைப்படங்கள், உடலுறவு புகைப்படங்களை இணையத்தில் பரவ விட்டு அந்த பெண்ணின் மீது சேற்றை வாரி பூசும் நோக்கத்தில் சாக்கடைக்குள் நிற்கும் வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் நிறைய...

தம்பதிகளாய் வாழ்ந்தவர்களுக்கே இந்த வக்கிரம் உண்டென்றால் அப்போதைய அரிப்புக்காக, தேவைக்காக படுக்க வரும்/ நீங்கள் தேர்ந்தெடுக்கும் எவனோ ஒருவனை நம்பி... உங்கள் அந்தரங்கங்களை புகைப்படம் எடுக்க எப்படி அனுமதிக்கிறீர்கள் பெண்களே...??

உங்களின் அந்த உடல் தேடல் கேவலம் என்றாலும், அந்த கேவல சாக்கடையில் உங்களுடன் உழன்ற ஒரு ஆண்புழு உங்களை அசிங்கப்படுத்த முயற்சிக்கும் துரோக வன்மம் உங்களின் மிச்ச வாழ்க்கையை கபளீகரம் செய்யும் என்பதை கூட அறியாத அளவிற்கா காமம் உங்கள் கண் மறைக்கிறது??

என்னடி இப்படி பன்றீங்களேடி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக