வியாழன், 29 ஜூன், 2017

கபாலி டா....


Image may contain: 1 person, sitting, beard and sunglasses
நான் ஏற்கெனவே பல பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்... நமக்கு வைக்கப்படும் "பெயர்" ஒரு மதத்தின், இனத்தின், மொழியின், வாழ்விடத்தின் அடையாளம்...

உதாரணமாக "செந்தில் " என்ற பெயர் பெரும்பாலும் தமிழர்களுக்கு மட்டுமே இருக்கும்.. ஒரு வட இந்தியனுக்கோ, ஒரு ஐரோப்பியனுக்கோ இருக்காது.... முகமது என்ற பெயரில் ஒரு இந்துவோ, கிறிஸ்தவரோ இருக்க மாட்டார்... முனியாண்டி என்ற பெயர் பெரும்பாலும் தேவகோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் இருக்கும்.... பார்த்தசாரதி, சாமிநாதன் போன்ற பெயர்களை பிராமணர்கள் வைப்பார்கள்...


இப்படி ஒரு பெயரை வைத்து அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்றும், எந்த மதத்தை, எந்த மொழியை சேர்ந்தவர் என்றும்.... ஏன்.... சில பெயர்கள் மூலம் அவர்கள் என்ன ஜாதியை சேர்ந்தவர்கள் என்றும் கூட கண்டுகொள்ளலாம்...

அதுமட்டுமல்லாமல்.. தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைப்பது என்பது ஒரு பாரம்பரியத்தின் அடையாளம்.... எனது பரம்பரையில் அண்ணாமலை, வீரப்பன் போன்ற பெயர்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.... ஏன்... தி மு க தலைவர் கருணாநிதியின் பேரக்குழந்தைகளின் பெயர்கள் உதயநிதி, தயாநிதி, அருள்நிதி என்று "நிதி"யை குறிப்பதாக... அதாவது தாத்தாவை குறிப்பதாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த உதாரணம்...

ஆனால்... சமகாலத்தில் தொண்ணூறு சதவிகிதம் பேர் வடமொழி, சம்ஸ்கிருத பெயர்களை சூட்டுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்... நிஷாந்த், விகாஷ், ப்ரனோத் என்று பலவாறாக....


இந்த பெயர்களை வைத்து இவர்கள் தமிழர்கள் என்று கண்டுகொள்ளவோ, இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று கண்டுகொள்ளவோ முடியாது....


இப்படி ஒரு பாரம்பரிய சங்கிலித் தொடர்பை துண்டிக்கும் விஷயத்தை மிக நேர்த்தியாக இயக்குனர் திரு பா ரஞ்சித் அவர்கள் "கபாலி" மூலம் திரு ரஜினிகாந்த் அவர்களை வைத்து கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்....


மேலும் அவர் கமலஹாசன், விஜைன்னா, தல அஜீத் போன்றவர்களை வைத்து சன்னாசி, தொப்புளான் போன்ற பாரம்பரிய பெயர்களில் படங்களை எடுபார் என்றும்... இதன் மூலம் பலருக்கு தங்கள் பாரம்பரியத்தை பற்றிய கௌரவம் ஏற்படும் என்றும் நம்பலாம்...


இதன் மூலம் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் பாரம்பரிய அடையாளம் கொண்ட பெயர்களை சூட்டி மகிழ்வார்கள் என்றும் நாம் நம்பலாம்...

வாழ்க பா ரஞ்சித்
வாழ்க ரஜினிகாந்த்

#கபாலி டா.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக