நான் வசிக்கும் / வசித்த அரபு நாடுகளில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்தே ஆக வேண்டும்.. அதே போல பில்லியனில் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்தே ஆகவேண்டும்... இது சட்டம்...
கடந்த
வருடம் நான் இதுபற்றி என் பாணியில் ஒரு பதிவிட்டேன்..."பொண்டாட்டி
புள்ளைங்க எல்லாம் செத்தப்புறம் நீ உயிரோட இருந்து என்ன கிழிக்க போற...
அவங்க எல்லாம் வெத்து தலையோட உட்கார வச்சுகிட்டு நீ மட்டும் ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டுற..?" என்பதாய் இருந்தது அந்த நக்கல் பதிவு..
நமது
ஊரில் இருக்கும் வாடகை கார் நிறுவனங்களின் அதிகபட்ச வாடகை/ சாலை வசதிகள்
மற்றும் எரிபொருள் விலைவாசி ஆகியவற்றால் குடும்பத்தினர் அனைவரும் ஒரே
இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. அதிலும்
நடுத்தர வர்க்கத்தின் வருமானத்திற்கு இதுவே சாத்தியம்.....
நமது
ஊரில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சட்டம்
இருக்கிறதே தவிர பின்னால்/முன்னால் அமர்ந்திருப்பவர்களை பற்றி அந்த
சட்டம் எதுவும் சொல்லவில்லை... ஆனால் சமகால சட்டம், தற்போதைய நடைமுறை அதனை
வலியுறுத்துவதாய் அறிகிறேன்.. இது ஒரு நல்ல தொடக்கம்..
பெரும்பாலான
இரு சக்கர வாகன விபத்துக்களில் வாகனம் ஓட்டுபவரை விட பின்னால்
அமர்ந்திருப்பவர் அதிக காயமோ/மரணமோ அடைந்த சம்பவங்களை நாம் நேரில்
பார்த்திருப்போம்...
நமது ஊரில் குழந்தைகள், மனைவி ஆகியோருடன் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வோர் அதிகம்... ஓட்டுபவர் மட்டும் ஹெல்மெட் அணிந்தால் போதுமா?? ஓட்டுபவருக்கு மட்டும் தான் விபத்தில் ஆபத்து ஏற்படுமா??
சற்றே
யோசிப்போம்.... ஒரு குவாட்டர் நூற்றைம்பது ரூபாய்... ஐந்து ரூபாய்
சேர்த்துக்கொடுக்க வேண்டும் என்றால் யோசிக்காமல் கொடுக்கும் நாம் ஒரு தரமான
ஹெல்மெட் ஆயிரத்து ஐநூறு-இரண்டாயிரம் என்றால் ஏன் இப்படி யோசிக்கிறோம்??
பத்து-பதினைந்து குவாட்டர் வாங்கும் காசு நம் மனைவியின்/குடும்பத்தின்
உயிரை காக்கும் என்றால் அதை செய்யாமல் என்ன சாதிக்க போகிறோம்????
எமது வேண்டுகோள்... ஹெல்மெட் தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளுக்கான அளவுள்ள ஹெல்மெட்டையும் தயாரித்தளிக்க வேண்டும்...
இதனை கட்டாயமாக அமல் படுத்த , ஹெல்மெட் இல்லாமல் நடக்கும் வாகன விபத்துக்களுக்கு காப்பீடு கோர முடியாது என்ற சட்டத்தையும் சேர்த்து அதி தீவிரமாய் அமல்படுத்த வேண்டும் என்பதே எம் அவா..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக