வியாழன், 29 ஜூன், 2017

அஸ்வமேத யாகம்

அஸ்வமேத யாகம் பற்றி ஓரளவுக்கு கேள்விப்பட்டிருக்கிறோம்... அது பற்றி கொஞ்சம் விரிவாக...
ஒரு பேரரசனாக முடிசூட்டிக்கொண்டவன் தன்னிடம் வேறு யாரும் போர் செய்வதற்கு தயாரில்லை என்பதை உணரும்/உணர்த்தும் விதமாக ஒரு குதிரையை கட்டவிழ்த்து விடுவான்.. அதனுடன் சுமார் நானூறு வீரர்களும் பயணிப்பார்கள்... அந்த குதிரை இஷ்டம் போல எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் போகும்... அது போகும் நாட்டின் மன்னன் அந்த குதிரைக்குரிய மரியாதை செய்து, பேரரசனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்தனுப்புவான்... இதன் மூலம், பேரரசின் தலைமையை ஏற்றுக்கொள்வதாகவும், கப்பம் கட்டுவதாகவும் ஒப்புக்கொள்ளும் நிகழ்வு அது....
No automatic alt text available.
ஏதேனும் ஒரு நாட்டு அரசன் அந்த குதிரையை பிடித்து கட்டிவிட்டால்... அவன் பேரரசனாக முடிசூட்டிக்கொண்டவனை எதிர்க்க துணிந்து விட்டதாக அர்த்தம்... அப்படி குதிரையை கட்டிய மன்னனை பேரரசன் வென்று மீண்டும் குதிரையை அவிழ்த்து விட செய்ய வேண்டும்... இதுவரை நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்த விஷயங்கள்...

அந்த யாக குதிரை திரும்பி வந்த பின் என்ன நடக்கும்...

அப்படி திரும்பி வந்த குதிரையுடன் சேர்த்து 51 வகையான மிருகங்கள் பலியிடப்படும்.... முதலில் நாய்.... அதன் பிறகு பூனை, நரி, முயல், எருமை என 51 வகையான மிருக பலியிடல் முடிந்தபின் கடைசியாக குதிரை....

அந்த யாக குதிரை ஒரே அடியாக கொல்லப்படாது... கழுத்தறுத்து குற்றுயிராக ரத்தம் ஒழுகவிடப்ப்படும்.... அந்த ரத்தத்தை அந்த பேரரசன் குடிக்க வேண்டும்... பிறகு தன உடல் முழுதும் பூசிக்கொள்ள வேண்டும்... பிறகு பட்டத்து ராணியும் அந்த இரத்தத்தை பூசிக்கொள்ள வேண்டும்... பிறகு அரசனும் அரசியும் ரத்தம் பூசிய நிர்வாண உடலுடன் குதிரையின் அருகில் ஒரு இரவு படுத்துக்கொள்வார்கள்... இருவரும் விலகியே படுத்துக்கொள்வார்கள்...

இரண்டாம் நாள் இரவு இருவரும் நெருங்கி படுத்துக்கொள்வார்கள்.. ஆனால் உடலுறவு கொள்ள மாட்டார்கள்... மூன்றாம் நாள் இரவு அரசி அந்த குதிரையுடன் உடலுறவு கொள்வாள்... இதற்கு அரசியுடன் இருக்கும் பெண்கள் துணை புரிவார்கள்.... அதன் பிறகு அரசியின் நெருங்கிய உறவு பெண்கள் இதே சடங்கை செய்வார்கள்... பிறகு அரசனும் அரசியும் உடலுறவு கொண்ட பின், குற்றுயிராக கிடக்கும் அந்த குதிரை முழுதாக பலியிடப்பட்டு நெருப்பில் இடப்படுவதுடன் அஸ்வமேத யாகம் நிறைவுறும்.

# ஷப்பா.... கேக்கவே கண்ண கட்டுதே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக