வியாழன், 29 ஜூன், 2017

தாய்மொழி பற்று

Image may contain: text
உலகத்துலேயே தமிழ்நாட்டுல மட்டும் தான் மொழி உணர்வு பற்றி பேசுவதும், அய்யகோ.... எங்கள் தாய்மொழி அழிகிறதே.... அதை அழியவே விடமாட்டோம்....அதை ஐ சி யு வில் சேர்த்தாவது காப்பாற்றியே தீருவோம்.... என்றெல்லாம் கூவி கூவியும் பதவிக்கு வந்தவர்கள் அதிகம்.... அதே நேரம் ... பேசவே தெரியாத தங்கள் குழந்தைகளிடம் "டோன்ட் டூ தட்...." "வேர் ஆர் யு" என்று ஆங்கிலத்தில் பேசும் ஆங்கில வெறியர்களும் அதிகம்...

ஒரு மலையாளியோ, ஒரு தெலுங்கனோ, ஒரு ஹிந்திக்காரனோ, ஒரு பிரெஞ்சு காரனோ, ஒரு ஜெர்மானியனோ அப்படி எப்போதுமே கூக்குரலிட்டதாய் தெரியவில்லை.... ஆனால்... அவர்கள் வீடுகளிலோ, தன்னுடைய தாய்மொழியை , தாய்மொழியாக கொண்ட மற்ற ஒருவரிடமோ பேசும்போது அவர்களது தாய்மொழியில் மட்டுமே பேசுகிறார்கள்...
புதிதாய் சந்திக்கும் ஒருவரிடம் பொதுவான தொடர்பு மொழியில் பேச ஆரம்பித்தாலும், சிறிது நேர உரையாடலில் அவர்கள் தம் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் என தெரிந்த அடுத்த வினாடியில் இருந்து சொந்த மொழியில் உரையாடலை தொடர்கிறார்கள்...
ஆனால்... யார் மொழி உணர்வு பற்றி அதிகமாக பேசினார்களோ....பேசுகிறார்களோ.... அந்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களோ.... தங்கள் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.... வெளிநாடுகளில் பிழைக்க போய் அங்கேயே தங்கிவிட்ட தமிழர்களோ.... தங்கள் குழந்தைகளுக்கு தமிழே தெரியாமல்தான் வளர்க்கிறார்கள்...
இதிலிருந்து என்ன தெரிகிறது..?? அரை நூற்றாண்டுகாலமாய் இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் மொழி உணர்வு பேச்சு.... ஒரு புல்லையும் புடுங்கவில்லை.... அது தமிழர்கள் மனதில் எந்த மாற்றத்தையும் விதிக்கவில்லை... மாறாக , யார் அப்படி பேசி பேசி உசுப்பினார்களோ.... அவர்களின் பொருளாதார நிலைமை வானளாவி வளரவும், பதவி-அதிகாரங்கள் பெருகவும் தான் பயன்பட்டிருக்கிறது....

மொழி உணர்வு என்பது மனதில் விதைக்கப்பட வேண்டும்.. சும்மா பேசி பேசி எதுவும் ஆகாது... உள்ளூரில் இருப்பவர்களோ.... பஞ்சம் பிழைக்க வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களோ தங்கள் மொழியை சேர்ந்தவர்களிடமும், தங்கள் குழந்தைகளிடமும் தமிழில் தான் பேச வேண்டும்.... இது சுய உணர்வால் வர வேண்டுமே தவிர, யாரும் சொல்லிக்கொடுக்க முடியாது..... அதுதான் உண்மையான மொழி உணர்வு...
நான் அப்படித்தான் இருக்கிறேன்...இந்த உணர்வு என்பது என்னுடைய சுய புரிதல் காரணமாகத்தான் ஏற்பட்டதே தவிர மொழி உணர்வு வியாபாரிகளினால் அல்ல....

குறிப்பு:- நான் வீட்டில் அபியிடம் தமிழிலேயே பேசுவதால் அவள் பள்ளியில் பல்வேறு நாட்டை/பல்வேறு தாய்மொழியை சேர்ந்த மற்ற மாணவர்களிடம் பேசுவதற்கு ஆங்கிலம் தடையாய் இருக்கிறது.... அதனாலென்ன.... தப்பு தப்பாய் பேசி பேசி கற்றுக்கொள்ளட்டும்.... எதற்காகவும் தாய்மொழி தெரியாமல் வளர்வதற்கான சூழ்நிலையை நான் உருவாக்கி கொடுக்க மாட்டேன்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக