வியாழன், 29 ஜூன், 2017

உயிர் நிலம்Image may contain: outdoor, nature and text

"வண்டிப்பாரம் ஏறியவுடன் காடிக்கும் மேலாக குப்பை, கோபுரம் குத்தியாக நிற்கும். வண்டியில் ஏறி உட்கார்ந்த உடன் பரமசிவம் மாட்டை பத்துவான். புஞ்சைக்குள் வண்டி போகும்.பட்டை வாரை கழற்றிவிட்டு வண்டியை தூக்கி வாரி விடுவான். மேக்கால் உச்சிக்கு போகிறபோது இவனும் தொங்கிக்கொண்டு உயரே போய் பிறகு குதிப்பான்..."

கற்பனை செய்ய வேண்டிய அவசியமின்றி எல்லாமே அனுபவித்த விஷயங்கள்... சொல்லாடல்கள்தான் சம்மந்தப்பட்ட பகுதிக்கு ஏற்றபடி இருக்கிறதே தவிர.. சம்பவங்கள் எல்லாம் அப்பாவுடன் எரு வண்டியில் ஏறிக்கொண்டு போனதை.... இளைஞனாய் தானே எரு அள்ளிப்போட்டு வண்டி ஒட்டிக்கொண்டு போனதை கண்முன்னே நிறுத்துகிறது... நிச்சயம் அந்த வாழ்க்கை இனிமேல் சாத்தியமில்லை...

கற்பனையில் எழுதுவது வேறு.... ஆனால் சம்பவங்களின் பாத்திரமே எழுத்தாளனாய்.... சாதாரண நிகழ்வுகளை கூட சுவாரஸ்யமாய் விவரிக்க தெரிந்தது வரம்...

சக விவசாயியாக ஒரு சாதாரண விவசாயியின் வாழ்க்கை சம்பவங்களை பதிவு செய்திருக்கும் மேலாண்மை பொன்னுச்சாமி என் இனம் என்பதில் எனக்கும் பெருமைதானே.... ஆம்.... விவசாயி இனம்...

எழுத்தாள விவசாயி மேலாண்மை பொன்னுச்சாமியின் "உயிர் நிலம்" ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக