வியாழன், 29 ஜூன், 2017

குல தெய்வங்கள்

Image may contain: 1 person, eyeglasses

இந்த புகைப்படத்தை பார்த்ததும் மகிழ்ச்சியும், சில கேள்விகளும் எழுந்தன..

அப்துல் கலாம் அவர்களின் புகைப்படத்திற்கு பூ-போட்டு எல்லாம் அணிவித்து சாமி போட்டோக்களுடன் சேர்த்து இன்னொரு சாமி ஆக்கி இருக்கிறார்கள்.

சமகாலத்தில் வாழ்ந்தவர்.. நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர் பருவத்திலேயே அதற்கான விதை விதைக்கப்பட வேண்டும் என்பதை ஆதார கொள்கையாக கொண்ட எளிய மனிதர். தனக்கென எதையும் சேர்த்து வைக்காமல் நாட்டுக்காக மட்டுமே யோசித்தவர்.. ஆனாலும் இயற்கை மரணம் அடைந்தவர்..
  

இவர் மீது மதிப்புள்ளவர்களை இவரை "சாமி" ஆக்கி இருக்கிறார்கள்..

ஆனால்.. இதே போலத்தானே நம் குலதெய்வங்களும்.. அய்யனாரும், வீரனாரும், முண்டகக்கண்ணி அம்மனும், காளியம்மனும், மாரியம்மனும், மதுரை வீரனும், போம்மியம்மாளும், வடிச்சம்மனும், பாவாடை சாமியும், அம்மிணி அம்மனும், துலுக்க நாச்சியாரும் , கொம்புக்காரனும் நம் முன்னோர்களோடு வாழ்ந்தவர்கள் தானே... நாட்டை காக்கவோ, ஒரு குடும்பத்தை காக்கவோ மரணமடைந்தவர்கள் தானே.. பல உயிர்களை காக்க உயிர் தியாகம் செய்தவர்கள் தானே...

இவர்களையும் அப்படித்தானே நம் முன்னோர்கள் சாமியாக வழிபட தொடங்கி இருப்பார்கள்... இப்போது புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.. ஆனால் அப்போது நடுகல், சிலைகள் என்று ஒரு அடையாளத்தை முன்னிறுத்தி அவர்களை வழிப்பட்டார்கள்...

இது எப்படி மூட நம்பிக்கையாகும்..?? சமகாலத்தில் வாழ்ந்த , வயதாகி, இயற்கை மரணமடைந்த அப்துல் கலாமை சாமியாக்கி இருக்கும் விவேக் தன்னுடைய திரைப்படங்கள் பலவற்றில் "பகுத்தறிவு" என்ற போர்வையில் இந்துக்களின் நம்பிக்கைகளை எவ்வளவு கேவலமாக விமர்சித்திருக்கிறார்... இப்போது இவர் செய்வதும் அதுவே தானே??

இனியாவது தன் எண்ணத்தை மாற்றிக்கொள்வாரா?? ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக