
படையாச்சி-வன்னியர்-நாயக்கர
தன் இனமக்களுக்கு பாதுகாப்பளிக்க.... அல்லது அந்த கட்சியின் பெயரை கேடயமாக பயன்படுத்திக்கொண்ட அந்த இன மக்களால்... முன்னெடுக்கப்பட்ட சில பல போராட்டங்களில் கொஞ்சம்நேர்வினையாகவும்- நிறைய எதிர்வினையாகவும் மாறி...."மரம்வெட்டி கட்சி" என்ற அடையாளமே நிலைக்கப்பெற்றது...
அரசியல்
சதுரங்க நகர்த்தல்களில் தன்னுடைய கட்சி வெட்டுப்படாமல் காத்துக்கொள்ள...
யார் எதை சொன்னாலும் அதையெல்லாம் புறம்தள்ளி திமுக- அதிமுக என்று மாறி
மாறி கூட்டணி வைத்து சில சட்டமன்ற- நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்து
தனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கான போராட்டத்தில் அந்தகட்சியின் நிறுவனர்
திரு ராமதாஸ் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம்..
இரண்டாவது தலைமுறை தலைவராக வளர்ந்த- வளர்க்கப்பட்ட திரு அன்புமணி அவர்கள்... முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு தற்போது தனித்து தேர்தலில் நிற்ககூடிய அளவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி பலம் பெற்றிருக்கிறதென்றால்.... அவர்களின் காய் நகர்த்தல்களும்- நம்பிக்கையும் அவர்களை வெற்றியை நோக்கி கூட்டிச்செல்வதாகவே தோன்றுகிறது..
இதன் முன்னோட்டமாகவே தற்போதைய தேர்தலில் முன்னிறுத்தப்பட்டிருக்கும்
வேட்பாளர்களில் மிக குறைந்த அளவிலேயே வன்னியர் ஜாதியை சார்ந்தவர்கள்
இருக்கிறார்கள்.... அதன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும்
அன்புமணியின் நவீன மக்கள் அணுகுமுறை அவரை திரும்பி பார்க்க வைக்கிறது...
மேடையில்
எந்த நாற்காலிகளுமற்ற , தனிமனிதனாக நிகழ்த்தப்ப்படும் அவரின்
கலந்துரையாடல்கள் ஜோடிக்கப்பட்டதாகவே இருந்தாலும்... தமிழக அரசியலுக்கு அது
முற்றிலும் புதிது...
இரண்டாவது
ஆச்சர்யம் .. அவர்களின் தேர்தல் அறிக்கை... நாங்கள் என்பதாண்டுகளாய்
அரசியலில் இருக்கிறோம்.... அறுபதாண்டுகளாய் அரசியலில் இருக்கிறோம்
என்றெல்லாம் முழங்கிவிட்டு மூன்று பேர்களுடன் "நாங்கள் ஒரு கட்சி"என்றுசொல்லிக்கொண்டு
வருவர்களுக்கு எல்லாம் ஒரு சீட்டு ஒதுக்கி அவர்களின் துணையுடன் தேர்தலை
சந்திக்கவரும் "மா"பெரும் கட்சிகளின் சில்லறைத்தனமான தேர்தல்அறிக்கைகளை
எல்லாம் புறம்தள்ளி கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும்,
விவசாயத்திற்காகவும் முன்னுரிமைகளை அளித்து, அதே நேரம் தொழில்துறைக்கும்
தேவையான முக்கியத்துவமளித்து வெளியிடப்பட்டிருக்கும் அவர்களின் தேர்தல்
அறிக்கை"அட...." என்றே வியக்க வைக்கிறது...
இவர்கள் இந்ததேர்தலில் தோல்வியை சந்திக்கலாம்.... ஆனால்... இவர்களின் முனைப்பும், இவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் மாற்றமும் இவர்களை இவர்களின் இலக்கை நோக்கி நகர்த்தும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை...
தங்களுக்குள்
பல சுயமாற்றங்களை ஏற்படுத்திக்கொண்ட பா ம க , எவ்வளவு நாகரீக மாற்றங்களை
கிரகித்து அதற்கேற்ப தங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொண்டாலும்
கூட..."குரு" போன்றவர்களை கொஞ்சம் நகர்த்தி வைத்தால்.... ஜாதீய அடையாளங்களை
முற்றிலும் உதிர்த்துவிட்டு பொதுவெளிக்கு முழுமையாய் வந்துவிட்டதாய்
நினைக்கலாம்....
அவர்களின் நகத்தல் வெற்றிபெற வாழ்த்துகள்,.....
அவர்களின் நகத்தல் வெற்றிபெற வாழ்த்துகள்,.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக